ஹஜ் கோட்டாவை அதிகரிக்க சவூதி அரேபியா சென்றுள்ள ஹலீம் + பெளசி
(எம்.எம். மின்ஹாஜ்)
இவ்வருடத்தில் இலங்கைக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்கும் நோக்குடன் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், இராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம் பெளசி தலைமையிலான குழுவொன்று இன்று சவூதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றதாக முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்தது.
சவூதி அரேபியவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே இலங்கை ஹஜ் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். இந்த விஜயத்தின்போது ஹஜ் துறை சார்ந்த அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை இலங்கையிலிருந்து பயணிக்கும் குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.
சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிமும் இந்த சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது ஹஜ் கோட்டாவை 7000 ஆக அதிகரிப்பது தொடர்பில் அதிகளவில் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் மக்கா, மதீனாவில் இலங்கை ஹஜ்ஜாஜிகளின் வசதி வாய்ப்புகள், பாதுகாப்பு, உணவு விநியோகம், போக்குவரத்து வசதிகள் என்பன பற்றியும் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment