புல்டோஸ் பந்துகளை வீசுகின்றனர் - மகிந்த ராஜபக்ச
எப்படியான சவால்கள் வந்தாலும் நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திருட்டுத்தனமாக கடன் பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள மகிந்த ராஜபக்ச, திருட்டுத்தனமாக கடனை வழங்கும் நாடுகள் இருக்கின்றனவா என கேள்வி எழுப்பியுள்ளார்.
களுத்துறையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்படியான நகைச்சுவைகளால், நாட்டை ஏமாற்ற முடியாது. நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சி உண்மையான எதிர்க்கட்சியாக செயற்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்த கட்சிகள். இதனால், இந்த கட்சிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றன.
நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பும் போது, இந்த கட்சிகள் பதிலளிக்க கூடிய இலகுவான கேள்விகளை கேட்கின்றனர். அரசாங்கம் அடிக்கும் படியாக புல்டோஸ் பந்துகளை வீசுகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை கோரும் போது. அவர்கள் விதித்துள்ள நிபந்தனைகள் கடந்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் நிபந்தனைகளை எதிர்த்ததால், நிபந்தனைகளை மறைத்து வைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை வரிகளை அதிகரித்து அதற்கு ராஜபக்ச வரி எனப் பெயரிட்டுள்ளனர்.
எனினும் வரி யாருடையது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாங்களும் ராஜபக்ஷ வரி செலுத்த வேண்டுமா?
ReplyDeleteஎன்னதான் இருந்தாலும் எப்படித்தான் இருந்தாலும் இனி உங்களுக்கு ஆட்சிக்கு வர மக்கள் வரந்தர மாட்டார்கள்! சத்தியம் இது சத்தியம்!
ReplyDeleteமக்கள் கலந்துகொள்வதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்...அரசை விரும்பாதவர்களும் கூட ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தும் சுதந்திரம் அவர்களுக்கு இப்போது உள்ளது. முன்னர் உமது கொடுமையான ஆட்சியில் பறிபோயிருந்த அந்த சுதந்திரத்தை இந்த நல்லாட்சிதான் மீள வழங்கியுள்ளது.
ReplyDeleteதிரு. ராஜபக்ஷ எம் பீ அவர்களே!மக்கள் கலந்துகொள்வதிருக்கட்டும்.. நீங்கள் கலந்துகொள்வீர்களா மாட்டீர்களா..? அதைக்கூறுங்கள் தைரியமிருந்தால்..?