மைத்திரிக்கு உதவிய கொள்ளையன் - திருட்டுப் பணத்தில் சிவனொளிபாத மலைக்கு சென்றார்
கொள்ளையிட்டு ஊருக்கு உதவும் நபர் ஒருவர் தம்மை 18 வயதில் முதன் முதலில் சிவனொளிபாத மலைக்கு அழைத்து சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களை அழைத்து செலயகத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடும் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அங்கு பேசிய ஜனாதிபதி,
தற்போது சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்லும் காலம் அல்லவா?. எத்தனை பேர் சிவனொளிபாத மலைக்கு சென்றீர்கள். சென்றவர்கள் கை உயர்த்துங்கள் என்றார். அப்போது சிவனொளிபாத மலைக்கு சென்றவர்கள் கைகளை உயர்த்தினர். இதனையடுத்து தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,
நான் முதன் முதலில் 18 வயதில் சிவனொளிபாத மலைக்கு சென்றேன். எமது கிராமத்தில் எங்களை விட மூன்று முதல் நான்கு வயது மூத்த விஜே என்பவர் இருந்தார்.
அவர் சரதியலை போன்றவர். கொள்ளையடிப்பார். அந்த பணத்தில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து என்பவற்றை வாங்கி தருவார்.
ஒரு நாள் அவர் எம்மிடம் வந்து, சிவனொளிபாத மலைக்கு செல்வோமா என்று கேட்டார். நாங்களும் விருப்பம் என்றோம். ஆனால், செல்வதற்கு எங்களிடம் பணம் இல்லை என்று கூறினோம்.
பணம் பிரச்சினையில், செல்ல தயாராகுங்கள் என்று விஜே எம்மிடம் தெரிவித்தார். சிவனொளிபாத மலைக்கு செல்லும் முதல் நாள் வரை அவரிடம் பணம் இருக்கவில்லை. ஆனால், பயணத்தை செல்ல தயாராகுங்கள் என்று அவர் எம்மிடம் கூறினார்.
நாங்களும் பயணத்திற்கு தயார் என்று கூறினோம். மறுநாள் ரயில் ஏறி சிவனொளிபாத மலைக்கு செல்ல தயாரானோம். விஜே எங்களுக்கு சேர்த்து டிக்கட் எடுத்தார். முதல் நாள் பணம் இல்லாதவரிடம் எப்படி பணம் கிடைத்தது என்று நாங்கள் வினவினோம்.
பண்டா முதலாளியின் வீட்டுக்கு எதிரில் உள்ள களஞ்சியத்தில் சுமார் 100 நெல் மூட்டைகள் இருந்தன. நான் தனியான 50 நெல் மூட்டை தோளில் சுமந்து சென்று விற்று பணத்தை சம்பாதித்தேன்.
அந்த பணத்தில் தான் நாங்கள் சிவனொளிபாத மலைக்கு போகிறோம் என்று விஜே தெரிவித்தார் என ஜனாதிபதி, அனைவரின் சிரிப்பொலிக்கு மத்தியில், தனது முதல் சிவனொளிபாத மலைக்கான யாத்திரை குறித்த சுவாரஸ்யத்தை விபரித்துள்ளார்.
அன்று திருடிய பணம் என்று தெரியாமலே யாத்திரை சென்றவரின் அனுபவப்பகிர்வு அது!
ReplyDeleteஆனால் இன்று தெரிந்தே தீய வழியில் சம்பாதித்த பணத்தில் புனித யாத்திரை செய்பவர்களும் நிறையப்பேர் இருக்கின்றார்கள்!
கள்ளப்பணத்தில் யாத்திரை சென்றவரிடம் உண்மையான அரசியலையும், நியாயத்தையும், நல்லாட்சியையும் எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? எல்லாம் டபிள் கேம்தான்!
ReplyDeleteஉண்மையில், இந்த சம்பவத்தைக்கூறி இவர் வெட்கப்படுவதோடு, கவலையும் பட்டிருக்கவேண்டும்... அதுதான் நல்லவனின் பண்பு!