Header Ads



ஹிஸ்புல்லா இயக்கத்தை, பயங்கரவாத அமைப்பாக அரபு லீக் பிரகடனம்


லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அரபு லீக் அறிவித்தது.

சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாகப் போரிட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இது மிகப் பெரிய பின்னடைவு எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து எகிப்து அரசுச் செய்தி நிறுவனமான எம்.இ.என்.ஏ. கூறியதாவது:

எகிப்து தலைநகர் கெய்ரோவில், அரபு லீக் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று எம்.இ.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஏற்கெனவே சவூதி தலைமையிலான 6 வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகளாக அறிவித்திருந்த நிலையில், 22 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அரபு லீக் அமைப்பும் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பை அமெரிக்காவும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில், ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவப் பிரிவு மட்டும் இடம் பெற்றுள்ளது.

லெபனானில் செயல்பட்டு வரும் ஷியா பிரிவு அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு, ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரான் ஆதரவளித்து வருகிறது.

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுக்கு, சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா உதவி வருகிறது.

இந்தச் சூழலில் ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகளாக அரபு லீக் அறிவித்திருப்பது, சவூதி தலைமைலான் சன்னி பிரிவு நாடுகளுக்கும், ஈரான் அணியைச் சேர்ந்த ஷியா பிரிவு நாடுகளுக்கும் இடையே பிளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

1 comment:

  1. இஸ்லாம் என்ற போர்வையில் இவர்களை நம்பி இருந்த மக்களுக்கு இப்போது புரியும் இவர்கள் எல்லாம் யாருடைய முகவர்கள் யாருடைய அடிவருடிகள் என்பது.உண்மையான யஹுதிகள்தான் இந்த சியாக்கள் ஹ்ஹாரிஜியாக்கள் என்று சொல்லக்கூடிய இந்த போரம்போக்குகல்தான் இஸ்ரவேலர்களின் ஏஜண்டுகள் இஸ்லாத்தை அளிக்கும் முக்கியமானவர்களின் அத்தியாவசிய பங்களிக்கும் இந்த சியாதான் ஹிஸ்புல்லாஹ் என்று சொல்லக்கூடிய ஹ்ஹாரிஜியாக்கள்.ஹ்ஹாரிஜியாக்களின் உண்மை வரலாறை படித்தால் இந்த ஹிஸ்புல்லாவின் உண்மை நிலை தெரிய வரும்.அரபியில் பயறை வைத்துக்கொண்டால் இஸ்லாமும் முச்ளிமுமாக முடியாது என்பதை இந்த சியாக்களை ஆதரிக்கும் நம்மவர்கள் உணர வேண்டும்.ஏகத்துவவாதிகளுக்குள் பல முரண்பாடு இருக்கிறதால் சியாவின் கருத்து சரியாகிவிடாது.ஏகத்த்வவாதிகளுக்குள் கியாம நாள் வரை முரண்பாடு இருக்கவே செய்யும் அதற்காக இவர்களை கொண்டு புகுர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்பதை முஸ்லிம்களான நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.