யாழ்ப்பாணத்தில் 'இக்ரஹ் மாதர் அபிவருத்தி அமைப்பு'
யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் குடும்பங்களில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், பிள்ளைகளின் ஒழுக்கம், சீர்திருத்தத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை தனது இலக்காகக் கொண்டு ' இக்ரஹ் மாதர் அபிவருத்தி அமைப்பு' 05.02.2016 அன்று யாழ் மக்கள் பணிமனை அலுவலகத்தில் மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி. ஏ. எஸ் சுப்யானின் வழிகாட்டுதலில் நிறுவப்பட்டதுடன் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
பின்வருவோர் நடப்பு வருடத்திற்க்கான நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் எஸ். ஸம்ஸமா, செயலாளர், எம். ஆர். நஸ்ரூன்னிஸா, பொருளாளர், ஏ. நுஸ்காவுடன் ஏழு பேர் கொண்ட நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இவ்வமைப்பினை தனியாகப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் தனியான வங்கிக் கணக்கும் திறக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இவ்வமைப்பில் அங்கத்துவத்தைப் பெற ரூபா 50 செலுத்தி விண்ணபப்படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பிரதிமாதமும் நான்காவது ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை மாதாந்த கூட்டத்தை நடத்துவதுடன் பயிற்சி நெறியை பூரணமாக முடிந்தவர்களுக்கு தொழிலாளகச் செய்வதற்கு தேவையான மூலப் பொருள்களுக்கு மானியமாக நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்தல் என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
கல்விப் பொதுத்தராதர உயர்வகுப்பு படித்துவிட்டு இருக்கும் பெண்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பது என்றும் ஆங்கில மொழி விருத்தி வகுப்புக்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment