உலகில் அதிகப்பெறுமதி வாய்ந்த “எக்காநைய்ட்” கல் இலங்கையில்
உலகில் அதிகப்பெறுமதி வாய்ந்த “எக்காநைய்ட்” கல் ஒன்று இலங்கையின் - வெலிமடை பகுதியில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எக்காநைய்ட்” என்ற கல், 161 கரட் பெறுமதியை கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக்கல் கதிரியக்கம் கொண்ட கல்லாக கருதப்படுகிறது.
பெரும்பாலும் இலங்கையில் மாத்திரமே உள்ளதாக கருதப்படும் இந்தக்கல் ஏற்கனவே 1985ஆம் ஆண்டு இரத்தினபுரி - எஹலியகொட என்ற இடத்தில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டது.
எனவே, அந்தக்கல்லே உலகின் பெரிய “எக்காநைய்ட்” கல் என்று கூறப்பட்டு வந்தது.
ரஸ்யாவிலும், வடஅமெரிக்காவிலும் இந்தகற்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1955ஆம் ஆண்டு இலங்கையின் எப்.எல்.டி.ஏக்கநாயக்க என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டமையால் இந்தக்கல் “எக்காநைய்ட்” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
Post a Comment