உயிரிழந்தவர்களின் வரிசையில் மகிந்த, பௌத்தத்திற்கு இழிவு
வடமேல் மாகாண கல்வித் திணைக்களம் பௌத்த மதத்தையும், வரலாற்றையும் இழிவுபடுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் பரீட்சை வினாத்தாள் ஒன்று தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தரம் 10க்கான பௌத்த சமய பரீட்சை வினாத்தாளில் பல்தேர்வு வினா ஒன்றில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரும் உள்ளடக்கப்பட்டு விடைகள் வழங்கப்பட்டிருந்தன.
மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இந்த பரீட்சை வினாத்தாள் பிழை தொடர்பான பொறுப்பினை ஏற்று மாகாண கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மாகாணக் கல்வித் திணைக்களம் எவ்வித பொறுப்பும் இன்றி இவ்வாறு செயற்பட்டுள்ளது.
தற்போது உயிருடன் இருக்கும் தலைவர் ஒருவரின் பெயரை இறந்தவர்களின் பட்டியலில் இணைத்தமை மஹிந்த ராஜபக்சவிற்கு செய்த அவமரியாதையாகும்.
இந்த பரீட்சை வினாத்தாளை தயாரித்த, பிழை திருத்திய, அச்சிட்ட அனைத்து அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment