Header Ads



பணவீக்கம் அதிகரிப்பு

ஜன­வ­ரி­மா­தத்தில் -0.7 சத­ வீ­த­மாக இருந்த நாட்டின் பண­வீக்­க­மா­னது ஆண்­டிற்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் பெப்­ர­வ­ரி­மா­தத்தில் 1.7 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்­­துள்­ள­தாக தொகை­ம­திப்பு மற்றும் புள்­ளி­வி­ப­ரத்­தி­ணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இப் பண­வீக்க அதி­க­ரிப்­பிற்கு முக்­கிய பங்­க­ளிப்புக் காரணியாக உண­வல்லா வகை காணப்­பட்­டது.

அந்த வகையில் வெறி­யம் சார் குடி­வ­கைகள் மற்றும் புகை­யிலை, ஆடை மற்றும் காலணி தள­பா­டங்கள்,வீட்டு உப­யோகப் பொருட்கள் மற்றும் வழ­மை­யான வீட்டு பேணல்கள் நலம் போக்­கு­வ­ரத்து மற்றும் பல்­வ­கைப்­பொ­ருட்கள் மற்றும் பணி­களின் துணைத் துறை­களில் கணி­ச­மான அதி­க­ரிப்­புக்கள் அவ­தா­னிக்­கப்­பட்­டன.

இது,தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணின் உணவு வகையில் அவ­தா­னிக்­கப்­பட்ட ஒட்­டு­மொத்த விலை வீழ்ச்­சி­யினை விஞ்சிக் காணப்­பட்­டது.

ஆண்டுச் சரா­சரி அடிப்­ப­டையில் அள­வி­டப்­பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணில் ஏற்­பட்ட மாற்றம் 2016 ஜன­வ­ரியில் பதிவு செய்­யப்­பட்ட 2.9 சத­வீ­தத்­தி­லி­ருந்து 2016 பெப்­ர­வ­ரியில் 2.6 சத­வீ­தத்­திற்­கு­வீழ்ச்­சி­ய­டைந்­தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்­டெண்ணின் மாதாந்த மாற்­றங்­களைப் பரி­சீல­னை கொள்­கையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 ஜன­வ­ரி­யி­லி­ருந்து 2016 பெப்­ர­வ­ரிக்கு 1.1 சத­வீ­தத்­தி­னால்­வீழ்ச்­சி­ய­டைந்­தது.

இந்த ­மா­தாந்த வீழ்ச்­சிக்கு முக்­கி­ய­மாக உணவு மற்றும் வெறி­ய­மல்லா குடி­பா­னங்­களின் வகையில் காணப்­பட்ட பொருட்­களின் விலை­களில் ஏற்­பட்ட வீழ்ச்­சியே முக்­கிய கார­ண­மாகும். அதன் பிர­காரம் காய்­க­றிகள்,அரிசி, பச்சை மிளகாய், பெரிய வெங்­காயம், சின்ன வெங்­காயம், உரு­ளைக்­கி­ழங்கு மற் றும் எலு­மிச்­சம்­ப­ழம்­என்­ப­ன­வற்றின் விலைகள் இம்­மாத காலப்­ப­கு­தியில் வீழ்ச்­சி­ய­ டைந்­தன. வெறி­யம்சார் குடி­வ­கைகள் மற்றும் புகை­யி­லை, வீ­ட­மைப்பு, நீர், மின்­வலு, வாயு, மற்றும் ஏனைய எரி­பொ­ருட்கள் தள­பாடங்கள், வீட்டு உப­யோ­கப்­பொ­ருட்கள் மற்றும் வழ­மை­யான வீட்டுப் பேணல்கள் நலம் மற்றும் பல்­வகைப் பொருட்கள் மற்றும் பணி­கள்­துணைத் துறைகள் 2016 பெப்­ர­வ­ரியில் அதி­க­ரித்­தன.

அதே­வேளை ஆடை, காலணி மற்றும் போக்­கு­வரத்துத் துணைத் துறை­களின் விலைகள் பெப்­ர­வ­ரியில் வீழ்ச்­சி­ய­டைந்­தன. தொடர்­பூட்­டல்­பொ­ழு­து­போக்கு, கலா­சாரம், கல்வி, உண­வ­கங்கள் மற்றும் சுற்­று­லா­வி­டு­திகள் துணைத் துறைகள் இம்­மாத காலப்­ப­கு­தியில் மாற்றமின் றிக் காணப்பட்டது.

No comments

Powered by Blogger.