முஸ்லிம்களுடனான உறவில் விரிசலை ஏற்படுத்த, என்மீது கொலைச்குற்றச்சாட்டு - நாமல்
றகர் வீரர் வசீம் தாஜுதீனுக்கும் எமக்கும் எந்தவிதமான முன் விரோதங்களும் இல்லை. எமக்கும் முஸ்லிம் மக்களுக்கும் காணப்பட்ட உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட கொலைச்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதென அம்மபாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றமை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக்கட்சியின் கூட்டிணைந்து உருவாகியுள்ள புதிய ஆட்சியின் செயற்பாடுகள், றகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ எம்.பி கேசரிக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
றகர் வீரர் வசீம் தாஜுதீனுக்கும் எமக்கும் எந்தவிதமான முன் விரோதங்களும் இல்லை. அவரை கொலைசெய்யபட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் எம்மை தொடர்பு படுத்தி தகவல்களை வெளியிடுகின்றார்கள். அது முற்றிலும் தவறானது. எமக்கும் முஸ்லிம் மக்களுக்கும் காணப்பட்ட உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குற்றச்சாட்டே அதுவாகும்.
அவ்வாறு விரிசலை ஏற்படுத்தி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதே எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் நோக்கமாகவிருந்தது. அதேபோன்று தமிழ் மக்களையும் எம்மிடத்திலிருந்து விலகச் செய்வதற்கும் அவ்வாறான சில திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
நாம் அனைத்து இனங்களும் இணைந்து ஒற்றுமையுடன் இருப்பதாகவே விரும்பினோம். ஆனால் அவர்கள் மத்தியில் தவறான பரப்புரைகளை முன்னெடுத்து எம்மிடத்திலிருந்து அந்நியப்படுத்தியுள்ளார்கள் என்றார்.
Post a Comment