Header Ads



வெளிநாட்டுப் பயணங்களின் போது அமைச்சர்கள் களியாட்டம் - விசாரணைக்கு மைத்திரி உத்தரவு

ஆறு அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக, விசாரணை நடத்த சிறிலங்கா மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களின் பொது, அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஆறு அமைச்சர்கள் தொடர்பாகவே விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதிபர் செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட இந்த அமைச்சர்கள், தமது பயண நோக்கத்தை மறந்து விட்டு, களியாட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்று எழுந்த குற்றச்சாட்டை அடுத்தே, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கப் பணத்தில் வெளிநாடு செல்லும் அமைச்சர்களுக்கு விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும், மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.