காதி நீதிமன்றங்களுக்கு பெண்களை, நியமிக்குமாறு கோருபவர்களின் கவனத்திற்கு..!
-Safras Arham-
இந்நாட்டு முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கிய பேரருள்களில் ஒன்று முஸ்லிம்களுக்கான தனியான காழி நீதி மன்றங்கள் கிடைத்துள்ளதாகும். அவை ஆரம்ப காலம் முதல் சமீப காலம் வரை நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் இருந்து வந்ததை யாவரும் ஏற்றுக்கொள்வர். என்றாலும் பிற்காலத்தில் வழங்கப்பட்ட சில தீர்ப்புகளும், காழி நீதிமன்றங்களின் செயற்பாடுகளும் பலரையும் சிந்திக்கச் செய்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.
பெண்களால் செய்யப்படும் முறைப்பாடுகள் சரியாக பரசீலிக்கப்படாமையும், வழங்கப்படும் தீர்ப்புகள் பெண்களுக்கு பாதிப்பானதாக அமைந்து வருவதனாலும், இதனிடையே கைலஞ்சங்கள் தவறான தீர்ப்புகளுக்கு வழிகோருவதாக இருப்பதாலும் பெண் சமூகம் ஆண்காழிமார்கள் மீது வெறுப்புணர்வோடு எழுதுவதையும் பேசுவதையும் காணக் கூடியதாக உள்ளது.
இந் நிலையில் நமது சமய சமூக விழுமியங்களை ஆராய்ந்து பார்ப்பது இன்றியமையாததாகும். இஸ்லாமிய வரலாற்றில் எங்குமே பெண்கள் காழிமார்களாக கடைமையாற்றியதாக வரலாற்றுப் பதிவுகளில் காணப்படவில்லை. அதேநேரம் தீர்ப்பு வழங்கும் போது கணவன்மார்களுக்கு துணையாக மனைவிமார்கள் இருந்துள்ளனர் என்பது காணக்கிடைக்கின்றது. அவ்வாறே ஒழுக்கசீலம் மிக்க எமது தாய்மார்கள் குடும்பப் பிரச்சினைகளை நீதிமன்றம் வரை சென்று தீர்வு பெறும் முயற்சியில் ஈடுபடாது, குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், ஊரில் உள்ள பெரியவர்கள் மூலமே தீர்த்துக்கொண்டுள்ளனர் என்ற நற்செய்தியையும் ஊர்மக்கள் பேசிக் கொள்வதை பார்க்கின்றோம். இது இஸ்லாத்தின் அடிப்படையைச் சார்ந்ததாகும். அல்குர்ஆன் கூறும் பின்வரும் வசனம் இதற்கு சான்றாக உள்ளது.
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். (அத்தியாயம்-04, வசனம்-35)
இதன் அடிப்படையிலேயே முஸ்லிம் விவாகப்பதிவில் மணவாளன் மணப்பெண் போன்றோர்களின் சாட்சி பதிவதற்கென்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே குடும்பப் பிரச்சிணைகள் எவ்வாறு தீர்கப்படல் வேண்டும் என்பதற்கு அல்குர்ஆனின் இந்த வழிகாட்டல் மிகவும் பொருத்தமானதாகும். அதேவேளை பெண்கள் காழியாக நியமனம் பெற்றால் அவர்களால் விசாரணைகளை ஆண்கள் போன்று நடாத்த முடியுமா என்பதும் கேள்விக்குரியதாகும்.
எனவே தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைவிட மருந்து செய்வதே ஆரோக்கியமாகும், காழிமார்களின் தீர்ப்பு திருப்தியானதாக இல்லாவிட்டால் அல்லது அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டால் அது பற்றி முறைப்பாடு செய்வதற்கு காழி உயர் நீதிமன்றம் இருப்பதனால் அதன் மூலம் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கலாம்.
ஷரீஅத் முறையில் தீர்ப்பு வழங்கவென ஏற்படுத்தப்பட்டுள்ள காழி நீதிமன்ற முறைமை அதனடிப்படையிலே நிகழ வேண்டும். அவ்வாறன்றி பெண் காழிமார்கள் நியமனத்தின் மூலம் தான் சரியான தீர்ப்பைப் பெறலாம் என்று எண்ணி அத்தகைய நியமன வேண்டுகோல்கள் விடுப்பது நமது சமூகக் கட்டமைப்புக்கு மாறுபட்ட ஒன்றாகத் தெரிகிறது.
Well said
ReplyDeleteஇந்த பெண்கள் காளிநீதிபதிகளாக வர வேண்டும் என்று பெண்கள் விரும்பினால் இதில் எவ்வலவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை புரிய முடிகின்றது.உண்மையில் பெண்கள் காதி நீதிபதிகளாக கடமையாற்றுவது மிகவும் கஷ்டமான வேலை.அதே நேரம் இந்த ஆண் காதிகளின் கேவலமான போக்கை நினைத்தால் மன வேதனைதான் எந்த விதமான மறுமையின் பயம் இல்லாமல் நேரடியாக லஞ்சம் வாங்கும் காதிகள் விடயத்தில் சம்மந்தப்பட்ட திணைக்களம் கவனம் செலுத்த வேண்டும்.தயிர் முட்டி,விரால் கருவாடு,தேன் போத்தல்,பசு நெய் போத்தல் போன்றவற்றையல்லாம் ஆண் தரப்பிடம் இருந்து வாங்கிக்கொண்டு குருட்டு நீதி தீர்ப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.1 2 3 4 5 வயது பிள்ளைகளுக்கு மாதம் 3000/= 4000/=5000/= ரூபாய் போதுமா என்ற அறிவில்லாமல் கட்டும்படி சொல்கிறார்கள் இந்த பணத்தால் இந்த பிள்ளைக்கு ஒரு மாதம் முட்டாசி கூட வாங்க முடியாது என்பது உலகறிந்த உண்மை தெரிந்து கொண்டே இவ்வாறான தீர்ப்பை கொடுத்து பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது வெளிநாடு போக வழிவகுப்பது மற்றும் தலாக் நடைபெறும் சந்தைர்ப்பத்தில் பெண் மீது அதிகமான குற்றங்களை சுமத்தி கொடுத்த கைக்கூலி சீதனம் போன்ற வற்றில் தள்ளுபடி செய்து நீதி வழங்கும் கண்றாவிகளையும் இந்த சில காதி நீதிபதி என்று சொல்லக்கூடிய அநீதிபதிகள் செய்து முடிக்கும் காட்சி நாளாந்தம் நடக்கிறது. ஆகவே அரசியல் செல்வாக்குள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் சண்டியர்கள் போன்றவர்களை இவ்வாறான நீதிபதிகளுக்கு நியமனம் செய்யாமல் உண்மையாக அல்லாஹ்வுக்கு பயப்படக்கூடிய தக்வாதாரிகளை நியமிக்க வேண்டும்.முகத்துக்காக ஒரு சமுதாயத்தின் ஷறிஆ சட்டத்தையே குழி தோண்டி புதைக்க முடியாது.என்பதை சம்மந்தப்பட்ட அமைச்சர் திணைக்களம் காதி நீதி பதிகள் மீதி வரக்கூடிய முறைப்பாடுகள் அது மொட்டைக்கடிதமாக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும் அப்போதுதான் இந்த கைதிகளை திருத்த முடியும்.
ReplyDeleteஇரக்க குணம் அதிகமாக இருக்கின்ற, அச்சுறுத்தலுக்கு பயப்படுகின்ற ஆணோ பெண்ணோ சில சந்தர்ப்பங்களில் நடுநிலை வாதியாக இருப்பது சாத்தியமற்றது.
ReplyDeleteதகுதி வாய்ந்த பெண்களை கதி மார்களாக நியமிப்பதில் மார்க்கத்தில் எந்தத் தவரும் தடையும் இல்லை.
ReplyDeleteQadi judges in Sri Lanka are retired government officers. Most of them have no knowledge about Islam. They even do not know how to talk to the affected couples. Mostly affected people are women. We know Islam does give a proper place to women but not our society. These judges are no way helping any women in terms of resolving their problems. They talk all the filthy words to anyone who goes to them. I don't know if these guys are following the sunnah of prophet SAW to resolve matters. They have their own style of talking all nonsense and put the people in an uncomfortable position. The affected would not return to them again as these guys talk filthy words like where did you sleep, when did you sleep, what did you do? Is this the way Islam has taught us to resolve matters between couples. I hate these few idiots who are politically appointed to these positions. ACJU should monitor these guys on how they perform their duties. Qadies are good to work as Wali for eloped couples that we see everyday in Sri Lanka. May Allah protect the affected couples.
ReplyDeleteMany of these qadi judges are crooks, cheaters. I know a qadi from Moratuwa who was in charge of Colombo West, given divorces having accepted bribes and many misuse of power, ultimately leading to interdiction from the post. Even after the interdiction, this guy use to pose as the qadi. He use to consult the parties of the cases he hear personally and give advice for money. Now a new qadi from Mt.Levinia is in charge of the region, is a decent & honest man.
ReplyDelete