Header Ads



சவூதி அரேபிய - ஜித்தா முதலிடத்தில்..!

உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவிலுள்ள ஜித்தா மாநகரம் செலவு குறைவாக நடக்கும் நகர வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.

ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் மனிதன் அன்றாட வாழ்க்கைக்கு சவூதி அரேபியாவில் குறைந்த அளவில் செலவு ஆவதாகவும், ஜித்தா மாநகரம் முதலிடத்தில் இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஜித்தா வணிக நகரமாகவும், துறைமுகம் கொண்ட கடற்கரை நகரமாகவும் விளங்குகிறது.

மேலும் அல்லாஹ்வுடைய அபய பூமியும் உலக முஸ்லிம்களின் புனித பூமியுமான மக்கா மாநகரம் ஜித்தாவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ளது. மற்றொரு புனித நகரமான மதினா ஜித்தாவிலிருந்து சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ளது.

இதுதொடர்பாக சவூதி அரேபியாவிற்கு சம்பாதிக்க செல்லும் சகோதரர்கள் சவூதி அரேபியாவில் சம்பாதிக்கும் பணத்தில் அல்லாஹ்வுடைய அருள் நிறைந்திருப்பதாகவும் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.

4 comments:

  1. முற்றிலும் உண்மை ஜித்தாவில்இருந்து மக்கா ஹறம் 85 KM மாஷா அல்லாஹ் ஜித்தாவில் வுழு செய்து கொண்டு மக்கா ஹறத்துக்கு தொழச் செல்லலாம் அல்ஹம்துலில்லாஹ் எல்லா முஸ்லிம்களுக்கும் அங்கு தொழ அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  2. யூகே, ஐரோப்பா, அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உழைப்பவர்களுக்கு இருக்கும் சுதந்திரமும், மன மகிழ்ச்சியும் சவூதி போன்ற நாடுகளில் தொழில் செய்யும் இலங்கைத் தொழிளார்களுக்கு இருப்பதில்லை. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இலங்கையர்கள் சேமிப்பது போன்று, சவுதியில் தொழில் புரிந்தது சேமிக்க முடிவதும் இல்லை.

    ReplyDelete
  3. Hari ஐரோப்பாவில் வாங்கும் Salary க்கும் Saudi இல் வாங்கும் salary க்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மற்றது நிறைய பேர் Government Benefit இல் வாழ்கிறார்கள். வீடு , child benefit அப்படி இப்படி என்று எவ்வாறெல்லாம் அரசை ஏமாற்றி சம்பாதிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சம்பாதிப்பார்கள். உறவினர், நண்பர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்களேன். அப்படி இருந்தும் எனக்கு இல்லை இல்லை , போதாது , கட்டுப்படியாகல்ல என்று தான் அவர்கள் கூரிக்கொண்டிருப்பார்கள்
    ஆனால் சவுதியில் கிடைக்கும் மன நிம்மதியைப் போன்று ஐரோப்பாவில் வாழ்பவர்களுக்கு கிடைப்பதில்லை. சவுதியில் இருந்துவிட்டு ஐரோப்பாவுக்கு வந்த பல நண்பர்கள் கூரிய விடயம் இது.
    ஐரோப்பாவில் ஒரு மனிதனுக்கு ஒரு £5 கையிலேந்து 5 நிமிடம் நடக்கவே பயப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.