Header Ads



விழிகள் சொல்லும் சோகக் கதை (படங்கள்)

"யுத்தம்" என்ற பெயரை கேட்டாலே பிஞ்சுக்குழந்தைகளின் கதறலும், மயானமாய் காட்சியளிக்கும் நகரங்களும் தான் நம் கண்முன்னே வந்து நிற்கின்றன. பல்வேறு வார்த்தைகள் இந்த உலகில் மறைந்து கொண்டு வந்தாலும், யுத்தம் என்ற வார்த்தை மட்டும் பல தலைமுறைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் நடக்கும் யுத்தத்தால் பாதிக்கப்படும் மக்கள் தங்கள் உயிர்களை கையில் பிடித்துக்கொண்டு சுவாசிக்க இடம் தேடி அலைகின்றனர். சிரியாவில் உள்நாட்டு யுத்தம்  நடைபெற்று வருகின்றது.

அந்த அளவுக்கு அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது, இதில் குறிப்பாக குழந்தைகள் தங்களது எதிர்காலம் பற்றிய பயத்தினை அழகிய சிறு விழிகளிலேயே வெளிப்படுத்துகின்றனர். இக்குழந்தைகளின் விழிகள் சொல்லும் சோகத்தை Muhammed Muheisen என்ற புகைப்படக்காரர் தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

பழுப்பு நிற கண்கள், ஊடுருவும் பார்வை என மிரட்டும் இக்குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்கையில், நமக்கே ஒருவித பரிதாப உணர்வினை ஏற்படுத்துகிறது.






No comments

Powered by Blogger.