முஸ்லிம் நாடுகளுக்கு சென்றவர்கள் மீது, விசாரணை நடத்துமாறு கோரிக்கை
-GTN-
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படாத காரணத்தினால், தொடர்புடையவர்களை கைது செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை வாழ் 30க்கும் மேற்பட்ட அடிப்படைவாத முஸ்லிம்கள் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலங்கையிலும் சவால்களை ஏற்படுத்தி வருவதாக காவல்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத அமைப்பினை தடை செய்ய வேண்டும் எனவும், பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பான 60 இணைய தளங்கள் தடை செய்யப்படவில்லை எனவும் அந்த இணைய தளங்களின் ஊடாக தொடர்புகள் பேணக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாலைதீவிலிருந்து ஆடைகள் கொள்வனவு செய்வதாக வருவோர் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Post a Comment