ஸஹ்வா மகளிர் அறபுக்கல்லூரி, ஷரீஆ கற்றைநெறிக்கு விண்ணப்பம் கோருகிறது
-பி. முஹாஜிரீன்-
ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக்கல்லூரிக்கு ஐந்து ஆண்டுகள் கொண்ட ஷரீஆ கற்றை நெறிக்காக 2016/2017 ஆம் கல்வியாண்டுக்காக புதிய மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அதிபர் அஷ்ஷேஹ் ஏ.எல். ஜலால்தீன் தெரிவித்தார்.
விண்ணப்பிக்க விரும்புவோர் அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருப்பதுடன்இ கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம்இ தமிழ்இ உட்பட 03 திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்இ சிறந்த உடல் ஆரோக்கியமும் நல்லொழுக்கமும் உள்ளவராக இருத்தல் ஆகிய தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஷரீஆ கற்கையை பூர்த்தி செய்பவர்களுக்கு மௌலவிய்யா சான்றிதழ் வழங்கப்படுவதுடன்இ இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் கா.பொ.த உயர் தரப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல்களும் பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும்இ தையல்இ கணனிஇ உளவளத்துணை ஆகியவைளுக்கான வழிகாட்டல்களும் பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன் ஆங்கிலம்இ சிங்களம் ஆகிய மொழிகளுக்கான தேர்ச்சி வகுப்புகளும் நடாத்தப்படும்.
இக்கற்கை நெறியை பயில விரும்புவோர் தபாலிலோஇ நேரடியாகவோ அல்லது 0778583731ஃ0718035337எனும் இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும் 2016.04.15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்போருக்கான நேர்முகப்பரீட்சை நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 2016.04.16 (சனிக்கிழமை) காலை 08.00 முதல் 12.00 மணி வரை ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அதிபர் மேலும் கூறினார்.
விண்ணப்பப்படிவங்களை அதிபர்இ ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரிஇ த.பெ.இல:02இ ஒலுவில் - 07 32360 எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Post a Comment