"பாரத் மாதா கீ ஜெய்" சொல்வதினால், முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை..?
-Satheesh Kumar-
பாரத் மாதா கீ ஜெய் - சொல்வதினால் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என விவரம் அறியாதவர் பலர் இங்கு உண்டு.- அறிந்து கொள்ளுங்கள்
பாரத மாதா' ஆலயம் - வாரணாசி , ஹரித்துவார் , மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள "லெஹ்" என இந்தியாவில் மூன்று இடங்களில் உள்ளது.
அபநிந்திரனாத் எனும் ஓவியர் தான் பாரத மாதாவிற்க்கு முதன் முதலில் உருவம் குடுத்தவர் - இவர் நம் நாட்டின் தேசிய கீதம் இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் உறவினர், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் - இவரின் பாரத மாதா ஓவியத்திற்கு விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா அதிக முக்கியத்துவம் தர விரும்பினார் - எனவே இந்திய மக்களுக்கு அவர் ஒரு கோரிக்கை விடுத்தார், சுதந்திர வேட்கையை மக்கள் எண்ணங்களில் முடுக்க அனைவரும் இந்த ஓவியத்தை தங்கள் இல்லங்களில் வைத்து மற்ற தெய்வங்களோடு தெய்வங்களாக போற்றி வழிபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திர வேட்க்கையில் இருந்த ஒவ்வொருவரும் தனக்கு தோன்றிய கருத்தை முன்வைத்தது போல இதுவும் ஒரு சாதாரண யோசனை தான், ஏற்ப்பவர்கள் ஏற்பார்கள், விடுபவர்கள் விட்டு விடுவார்கள் - ஆனால் இந்த யோசனைக்கு நாட்டுபற்று வர்ணம் பூசிநால் தானே ஆர் எஸ் எஸ் க்கு லாபம் ..பாரத மாதா என்ற ஒரு சாதாரண ஓவியம் - நாட்டை குறிப்பதாக அர்த்தம் திரிக்கப்பட்டது இங்கே தான்.-
இந்திய திருநாட்டைத்தானே பாரத மாதா என சொல்கிறோம் என கேட்பவர்களுக்கு . பாரத மாதா என்னும் சொல் - வெறுமனே இந்தியாவை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருந்த போது இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை - மாறாக ஒருவர் கற்பனையில் வரைந்த ஓவியத்தை, புதிய தெய்வமாக்கி அதை ஒருவர் செய்த பரிந்துரையின்படி - வழிப்பாடாக செய்ய தொடங்குவதை தான் மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர் முஸ்லிம்கள்-
வந்தே மாதரம் என்றால் - இந்த மண்ணை வணங்குகிறேன் என அர்த்தம் - முஸ்லிம்களின் அடிப்படையில் தங்கள் வணக்கத்தில் ஓரிறைவனுக்கு எதையும் யாரையும் இணையாக்க கூடாது என்றிருப்பவர்கள்-, தங்களுக்கு மார்க்கம் கற்று தந்த இறைத்தூதரைக்கூட வழிப்படமாட்டார்கள் - ஆனால் அந்த அடிப்படையையே தகர்க்கும் இந்த வேண்டுகோளுக்கு எப்படி உடன்பட முடியும் - இது போதாதா ஆர் எஸ் எஸ் அறிஞர்களுக்கு'க்கு குட்டையை குழப்ப ?? இந்த இரண்டு விஷயத்தை கையில் எடுத்து கொண்டு - தேச துரோகி என சொல்வதும், தீவிரவாதி என கலவரம் செய்வதும் - உயிர்பலிகளும் இன்றளவும் தொடர்ந்து நீடிக்கிறது.
மோகன் பகவத் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? ஏன் குறிப்பாக பாரத் மாதா கி ஜெய்" கோஷத்தை ஏன் திடீரென முன் வைக்கிறார்? ஏன் ஜெய் - ஹிந்த் கோஷத்தை முன் வைக்கவில்லை - அப்படி வைத்தால் பிழைப்பு நடக்காதே ?
அவருக்கு தெளிவாக தெரியும்,- நாம் இப்படி சொன்னால் முஸ்லிம்கள் என்ன பதிலடி குடுப்பார்கள், பிறகு என்ன நடக்கும், அதை எங்கு கொண்டு செல்லலாம் என்று !! பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி நாசம் ஏற்படுத்திய அதே தந்திரத்தை இந்த அரைவேக்காட்டு தலைமுறையை கொண்டு நிகழ்த்த திட்டமிடுகிறார்.
very good explain
ReplyDeletegood explain thanks brother
ReplyDeleteநீங்கள், தீவிரவாத கோஷத்தை எழுப்பும் உங்கள் நாற வாயால் இந்த புனிதமான சொல்லை உச்சரிக்காமல் இருப்பதே சிறப்பு.
ReplyDelete