சுவிஸில் மார்க்கக் கல்வியில், திறமையை வெளிப்படுத்தும் இலங்கைச் சிறார்கள் - ஹனீப்
சுவிஸில் வாழும் இலங்கை பெற்றோர்களுடைய பிள்ளகைள் மார்க்கக் கல்வியில் தமது திறமையை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத் தலைவரும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் தலைவருமான அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் தெரிவித்தார்.
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் இளம் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான இஸ்லாமிய சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு நேற்று சனிக்கிழமை, 05 ஆம் திகதி, எம்ரிசால் - ஊர்டோர்ப் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
சுவிஸில் வாழும் இலங்கை பெற்றோர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கபப்பட்ட மஸ்ஜித்துல் ரவ்ளா குர்ஆன் பாடசாலை மாணவர்கள் இந்த மேடையில் வெளிப்படுத்திய திறமைகள் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்தது. அந்த மாணவர்களை பயிற்றுவித்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
சுவிஸில் வாழும் இலங்கைச் சிறுவர்கள் தமது மார்க்கக் கல்வியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பிக்கபட்ட மஸ்ஜித்துல் ரவ்ளா குர்ஆன் பாடசாலையில் 80 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயில்கிறார்கள். அவர்களுக்கு சிறந்தமுறையில் கல்வியைப் போதிக்கும்ஆசிரியர்களுக்கு இங்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் தமது பிள்ளைகள் மார்க்கக் கல்வி பெறவேண்டும், என்ற உயர்நோக்குடன் குர்ஆன் பாடசாலைக்கு அழைத்துவரும் பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தமது பிள்ளைகள் பெறும் மார்க்கக் கல்வியை ஒரு பொது மேடையில் பகிரங்கப்படுத்தி, அவர்களுடைய திறமையை வளர்க்கும் பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
மேலும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய இளம் பிரிவினர் உத்வேகத்துடன் செயற்பட ஆரம்பித்திருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்கள் ஒருகாலத்தில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தையும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் நிர்வாகத்தையும் மிகவும் திறம்பட வழிநடத்துவர்கள் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த சிறுவர் நிகழ்ச்சியை அவர்கள் சிறந்தமுறையில் ஏற்பாடு செய்ததன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த இளம் வயதினரை வழிநடத்தி, அதற்காக பாடுபட்ட ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய செயலாளர் அமீர் அவர்கள் இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்.
மேலும் இந்த சிறுவர் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய அங்கத்தவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட சலகருக்கும் நன்றி கூறி அவது தனது உரையை முடித்துக்கொண்டார்.
Post a Comment