Header Ads



"ஹிஸ்புல்லாவின் சேவை"


நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400 பேர் விரைவில் உம்ரா கடமைகளுக்காக மக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா ஹிரா பவுன்டேஷன் ஏற்பாட்டில் 55 வயதுக்கு மேற்பட்ட முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் 500 பேருக்கு இலவச உம்ரா வேலைத்திட்டத்தில் நாடாளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட முதல் குழு நேற்று திங்கட்கிழமை உம்ரா கடைமகளுக்காக மக்கா நோக்கி புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு சென்றிருந்தனர். 

இந்நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் பேதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

இதுவரைக் காலமும் உம்ரா அல்லது ஹஜ் கடமையை செய்யாத உலமாக்கள் இருப்பார்களாயின் அவர்களுக்கு உம்ரா ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஹிரா பவுன்டேஷன் முன்வந்துள்ளது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட 500 பேர்களில் முதல் 100 பேர் கொண்ட குழுவே இன்று (நேற்று) புனித மக்கா நகர் நோக்கி செல்கின்றனர். மீதமுள்ள 400 பேரும் இன்னும் சில வாரங்களில் அனுப்பி வைக்கப்படுவார்கள். – எனத்தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.