Header Ads



பௌத்தத்திற்கு ஆபத்தென பிக்குகளை ஏவி, அரசாங்கத்திற்கு நெருக்கடிகொடுக்க சூழ்ச்சித்திட்டம்


-GTN-

இனவாத அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினர் இது குறித்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன மற்றும் மதவாத அடிப்படையில் தூண்டுதல்களை மேற்கொண்டு அதன் ஊடாக பிளவுகளை உருவாக்கி அரசாங்கத்தை கவிழ்கும் வியூகமொன்றை மஹிந்த தரப்பு முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முப்படையினர் மற்றும் பௌத்த பிக்குகளே இந்த முயற்சிக்கான பகடை காய்களாக பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் ஒர் பிரிவான புத்திஜீவிகளின் குரல் (வியதுன்கே ஹன்ட) என்ற அமைப்பினைச் சேர்ந்தவர்கள் சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படையினருக்கு உரிய வகையில் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை மேலும் கொடுப்பனவுகள் நீடிக்கப்பட வேண்டுமென ஊனமுற்ற படையினர் முதல் அனைத்து படையினரையும் தூண்டி அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மறுபுறத்தில் சிங்கள பௌத்தத்திற்கு ஆபத்து ஏற்படுவதாக பௌத்த பிக்குகளை ஏவி அவர்களின் ஊடாக அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் நெருக்கமான சில படையதிகாரிகளும் இந்த சூழ்ச்சித் திட்டத்திற்கு உடந்தையாக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் புலனாய்வுப் பிரிவினருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.