Header Ads



"பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அணு ஆயுதத்தை கைவிட மாட்டோம்'

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து, கடன் சுமை அதிகரித்தாலும் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடமாட்டோம் என அந்த நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

 நாட்டின் பொருளாதார நிலை குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்து, அவர் கூறியதாவது:

 இடையில் கைவிடுவதற்காக நாம் அணு ஆயுதத் திட்டத்தைத் தொடங்கவில்லை. நாட்டின் பாதுகாப்புக்காக அணு ஆயுதத் திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தைப் பாதுகாப்பது நாட்டின் கடமை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நமது கடன் சுமை 10,000 கோடி டாலராக ஆனாலும், கோடி கோடியானாலும், அணு ஆயுதத் திட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்றார் அவர்.

 அமெரிக்கா கவலை: பாகிஸ்தான் அணு ஆயுதங்களைத் தயாரித்து குவித்து வருவது கவலையளிப்பதாக அமெரிக்க ராணுவ உளவு அமைப்பின் இயக்குநர் வின்சென்ட் ஸ்டூவர்ட் தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் அணு ஆயுதக் கையிருப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சி அணு ஆயுதப் போரை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

No comments

Powered by Blogger.