Header Ads



இஸ்லாத்தின் அந்தஸ்த்துக்கு எதிராக மனு: பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரிப்பு

பங்களாதேஷ் அரசியல் அமைப்பில் இஸ்லாம் மாதத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோபூர்வ அந்தஸ்த்தை அகற்றிக்கொள்ளுமாறு மாதச்சார்பற்ற செயற்பாட்டளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்நாட்டு உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இது மனுத்தாக்கல் செய்ய உரிமையற்ற விடயம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு பங்களாதேஷில் பதற்றத்தை எற்படுத்தியதோடு இதனையொட்டி நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்தே இஸ்லாமி நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பங்களாதேஷ் மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும் 1988 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஹுஸைன் முஹமது இர்ஷாத் இஸ்லாத்தை உத்தியோகபூர்வ மதமாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தார்.

எனினும் இஸ்லாத்தின் உத்தியோகபூர்வ அந்தஸ்த்து நாட்டின் மாதச்சார்பற்ற கொள்கைக்கு முரணானது என்றும் முஸ்லிமல்லாதோர் மீதான துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் என்றும் மதச்சார்பற்றோர் வாதிடுகின்றனர். பிரதமர் ஷெய்க் ஹஸீனா, அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு அதரவாக இருந்தபோதும் சட்டத்தில் இருக்கும் இஸ்லாத்தின் அந்தஸ்த்தை அகற்றுவதில்லை என உறுதி அளித்துள்ளார். 

No comments

Powered by Blogger.