Header Ads



பொன்சேக்காவின் பொய் - பசில்

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்ததாக தான், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கூறவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். எனினும் பொன்சேகாவின் குற்றச்சாட்டை பசில் ராஜபக்ச, அரசியல் வேட்டை என வர்ணித்துள்ளார்.

பொன்சேகா கூறியது, முற்றிலும் பொய்யானது, அப்படியான சம்பவம் நடைபெறவில்லை. பொன்சேகாவுடன் நான் அப்படியான எதனையும் பேசவில்லை.

இது அவரது கருத்துக்கு அமைய கூறிய விடயமல்ல. ஒரு நீண்டகால இலக்கு ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் வேட்டையாடல் நடவடிக்கை என்று எமது சட்டத்தரணிகள் கருதுகின்றனர் என பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

அதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான வங்கிகள் மற்றும் வேறு விதமாக கைப்பற்றிய தங்கத்தை மீண்டும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கிய போதிலும் அதில் ஒரு பகுதி காணாமல் போயுள்ளதாக அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ச, தங்கத்தை மீண்டும் மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், அது பற்றிய மேலதிக தகவல்கள் தனக்கு தெரியாது என்றார்.

இதேவேளை, ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில், கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில், பொன்சேகாவின் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். கைப்பற்றிய தங்கத்தை மீண்டும் கையளித்தமை சம்பந்தமான சட்டரீதியான பின்னணி எனக்கு தெரியாது என்றார்.

தங்கத்தை மீண்டும் வழங்கியமை தொடர்பில் தேவையெனில் விசாரணைகளை நடத்துவதில் எவ்வித தவறையும் தான் காணவில்லை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. தேவையில்லாத கதைகளைவிட்டு திவிநெகும என்ற பெயரில் மக்களுடைய பணம் 299000000000( இருபத்தி ஒன்பது இலட்சம் தொன்னூறு ஆயிரம்கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு அமெரிக்காவுக்கு களவாகக் கொண்டு சென்ற பணம் எங்கே? அதை மரியாதையாக அரசாங்கத்திடம் கையளிக்குமாறு இந்த நாட்டின் பொதுமகன் என்ற வகையில் நாட்டு மக்கள் சார்பாக கோரிக்கைவிடுகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.