தீவிரவாதிகளின் மனைவி, குழந்தைகளை கொடூரமாக கொல்லவேண்டும் - டொனால்ட் டிரம்ப்
குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கான தேர்தலில் களமிறங்கியுள்ள டொனால்டு டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரியவற்றை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தீவிரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தீவிர வாதிகள் நம்மிடம் விளையாடும் அதே முறையை நாமும் கையாள வேண்டும். தீவிரவாதிகளை கடுமையாக சித்ரவதை செய்ய வேண்டும். அவர்களின் மனைவி, குழந்தைகளைக் கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம். அதனால்தான் நம்மால் ஐஎஸ் அமைப்பை வெற்றிகொள்ள முடியவில்லை. நாம் மிக மென்மையாக கையாள்கிறோம், அவர்களோ தீவிரவாதிகள், எந்த கட்டுப்பாடும் அற்றவர்கள். காட்டுமிராண்டிகளான அவர்களை கடும் சித்ரவதை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
டிரம்ப்பின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் பிரச்சாரக் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “அமெரிக்க ஜனாதிபதியாக சர்வதேச உடன்படிக்கைகளை, சட்டங்களை பின்பற்றுவார். ராணுவம் அல்லது இதர அதிகாரிகள் சட்டத்தை மீறும்வகையில் உத்தரவிடமாட்டார் என கூறியுள்ளது.
மிருகங்களை பழிவாங்கும் நோக்கில் (குழந்தைகள், பெண்கள் என) அப்பாவி மனிதர்களை குதற துடிக்கும் இன்னொரு வெறிபிடித்த மிருகம், அதன் வளர்ப்பாளர்களால் வேட்டைக்கு தயார்படுத்தப்படுகிறது!
ReplyDeleteகுழந்தைகளைக்கூட "நேரடியாக" கொன்றுகுவிக்க நாடும்விதம்... அற்ப அரசியலினதும், செல்லாக்காசாகிப்போன மதப்போதனைகளின் பலகீனமே!