குடும்பத்தினரால் தோற்கடிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு அவரது குடும்பத்தினரே காரணம் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்கள் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பிருந்தும் தேர்தலை நடத்தி தோல்வியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
செவனகல பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மகிந்தவை வேறு யாரும் தோற்கடிக்கவில்லை அவரது குடும்பத்தினரும் சுமணதாச என்பவருமே தோற்கடித்தனர்.
இரண்டு வருடங்கள் இருக்கும் போது கேட்டு வாங்கிக் கொண்டார். இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் போது, செய்ய வேண்டிய பல வேலைகள் இருக்கும் போது, அவற்றை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு தேர்தலை நடத்தினார்.
என்ன நடந்தது, அவருக்கு தெரியாமலேயே நிலைமை தலைகீழாக மாறிப் போனது.
எமக்கு இருந்த சிறிய அறிவு காரணமாக ஆட்சியில் உள்ள அரசாங்கத்தில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய முடிந்துள்ளது எனவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

Post a Comment