மின்சார சபையின் தலைவரின், இராஜினமா நிராகரிப்பு
இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபாலவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மின்வலு அமைச்சின் செயலாளர் சுரேன் படேகொட தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் மின்சார தடை ஏற்பட்டமைக்கு மின்சார சபையின் தலைவர் பொறுப்பு சொல்ல முடியாது என்பதனால், இந்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் 2 தடவைகள் நாடு முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவித்த அவர், இந்த மின்சாரத் தடைகள் நாச வேலை காரணமாக இடம்பெறவில்லை எனவும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடம்பெற்றவை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் ஓர் மின் விநியோக நிலையத்தில் ஏற்படும் கோளாறு முழு நாட்டினதும் மின் விநியோகத்தை பாதிப்பது ஓர் பிரச்சினையே எனவும், அது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

ithu edhirpaartadhutaan...
ReplyDelete