ஜூம்ஆ தொழுகைக்கு சென்றவர் மீது, தவத்தின் கூலியாட்கள் கத்திக்குத்து - மறுக்கிறார் தவம்
-அப்துல் ஹை-
ஜூம்ஆ தொழுகைக்காக சென்றவர் மீது கிழக்கு மாகாண சபை முகா உறுப்பினர் தவத்தின் கூலியாட்கள் ஐவர் கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இன்று (11 / 03 / 2016) அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் அமீர் முகம்மட் ஜூமான் (அக்கரைப்பற்று தொழிநுட்பக் கல்லூரியில் கல்விகற்பவர்) என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில் சேர்க்கப்பட்டள்ளார்.
கத்தியால் குத்தியவர் என கூறப்படும் அப்துல குத்தூஸ் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் அநாகரிகமானமுறையில் நடந்து கொண்ட போது சில இளைஞர்கள் அவர்களின் செயற்பாட்டை தட்டிக்கேட்டதாகவும் அவ்வேளை கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனும் அந்த இடத்தில் நின்றுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இதன் பின்னணியில் தான் குறித்த இளைஞன் ஜூம்ஆ தொழுகைக்கு சென்றவேளை இவர் மீது அப்துல குத்தூஸ் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் கடமை புரியும் அப்துல குத்தூஸ் குத்தூஸ் என்பவர் கடமை நேரத்தின் போதே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் காயமுற்றுள்ளதாக வைத்தியாசலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்தின் அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்த அப்துல குத்தூஸ் என்பவருக்கே தவத்தின் சிபாரிசின் ஊடாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அலுவலகத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்குறிப்பு
இந்தச் சம்பவம் தொடர்பில் அறிவதற்காக jaffna muslim இணையம் தவத்துடன் தொடர்புகொண்டது. இந்தக் குற்றச்சாட்டை தவம் முற்றாக மறுத்தார். இது தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என்றார். அத்துடன் தான் இச்சம்பவம் குறித்து அறியவில்லை எனவும் குறிப்பிட்டார்

யாருடைய ஆள் யாராக இருந்தாலும் இன்னொருவருடைய இரத்தத்தை ஒட்டும் உரிமை யாருக்கும் இல்லை.அவர் தவத்துட ஆளாகட்டும் அல்லாது தர்மத்துடைய ஆளாக இருக்கட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ReplyDelete