"அழகிய யுவதிகளை பயன்படுத்தி, பாடசாலை மாணவர்களுக்கு பியர்"
அழகிய யுவதிகளைக் கொண்டு தமது பியர் விற்பனையை அதிகரிக்கும் புதிய யுக்தி ஒன்றை பிரபல நிறுவனம் ஒன்று முன்னெடுத்துள்ளது.
இதன்படி தலைநகர் மற்றும் புறநகர்களில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் தற்போது இடம்பெற்று வரும் ”பிக் மெட்ச்” எனப்படும் கிரிக்கெட் போட்டிகளை குறித்த நிறுவனம் குறிவைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த பிக்மெட்ச் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அழகிய யுவதிகளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு பியர் வழங்கப்படுவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை விஷேட வைத்திய நிபுணர் அசங்க விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் இடம்பெற்ற குறித்த பிக் மெட்ச் போட்டிகளின் போது பியர் உற்பத்தி நிறுவனங்கள் இரண்டு கோடிக்கும் அதிகமான இலாபத்தை பெற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பாடசாலைகளில் இடம்பெறும் பிக் மெட்ச் தொடர்பாக தாம் மேற்கொண்ட ஆய்வுகளின் படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதியவர்களை பியர் அருந்த வைப்பதே குறித்த நிறுவனங்களின் நோக்கம் என்றும் வைத்திய நிபுணர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்தினை பாடசாலை மாணவர்கள் மூலம் ஆரம்பிப்பதற்காக பாடசாலை பிக் மெட்ச் இடம்பெறும் நேரங்களில் அழகிய யுவதிகளைக் கொண்டு பியர் விற்பனை செய்வதாகவும்,இதற்காக குறித்த யுவதிகளுக்கு 25,000 ரூபாய்க்கும் அதிகம் பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2015 இல் கொழும்பில் மிகவும் பிரபல கல்லூரிகளுக்கிடையில் இடம்பெற்ற பிக்மெட்ச்சின் போது அனுசரணை வழங்கிய பியர் நிறுவனம் ஒன்று இரண்டு நாட்களில் 17 இலட்சத்துக்கும் அதிகம் இலாபத்தை பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
INDA NEWS GNANASARA THERARUKKU THRIYAZA
ReplyDeleteஅவருக்குத் தெரிந்திருந்தால் அவரும் போய் ஒரு Pint வாங்கியிருப்பார்.
ReplyDelete