Header Ads



"எந்தவொரு செயலிலும், சம்பந்தன் ஈடுபடவில்லை"


நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருக்கும் தமிழ்க்  கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான வகிபாகத்தை உரிய முறையில் முன்னெடுப்பதாக தெரியவில்லை. நாட்டு மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே எதிர்க்கட்சித் தலைவர் செயற்பட்டு வருகின்றார் என்று ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஒரு பங்காளிக்கட்சிபோன்றே கூட்டமைப்பு செயற்படுகின்றது. மாவின் விலை அதிகரிக்கப்பட்டபோதும், மின்சாரம் தடைப்பட்ட போதும் மக்களின் சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் எந்தவொரு  செயலிலும் ஈடுபடவில்லை. தமிழ் கூட்டமைப்பின் தலைவர் முழு நாட்டினதும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒன்றிணைந்த எதிரணியினர் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவானது தவறான முறையில் இடம்பெற்றதாக கூறுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவறு குறிப்பிட்டார்.

1 comment:

  1. Why should they go to Geneva. Is Geneva next to Hambantota or Galle.These clowns shout a lot that there should be internal proceedings comprising of local judges,local attorneys etc etc,They could easily solve any problem of the country by themselves. Why to Geneva?

    ReplyDelete

Powered by Blogger.