Header Ads



நம்பிக்கையை பொய்யாக்காத தொழுகை (உண்மைச் சம்பவம்)


-Fashlin Mohame

நான் வாழ்கையில் 3 தடவை மழைவேண்டி ஸலாத் அல் இஸ்திஸ்கா தொழுகையில் கலந்துகொண்டிருக்கிறேன். 

அந்த மூன்று தொழுகையிலும் இமாக நின்று தொழுவித்ததும் கொத்பா ஓதியதும் செய்ஹுல் பலாஹ் அஸ் ஸெய்க் அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்கள்தான். மக்கள் கொழுத்தும் அந்த வெயிலிலும் எந்த சந்தேகமும் இன்றி... தொழுது முடிந்ததும் மழை வரும். 

நனையாமல் இருக்க குடை வேண்டும் என மறவாது கையோடு குடைகளையும் கொண்டுவந்திருந்தனர். 

கொழுத்தும் வெயிலில் தன் ஆடைகள் வியர்வையால் நனைய... முகங்களிலும் கழுத்துப்புறங்களிலும் முத்து முத்தாய் வியர்வை துளிகள் படர தொழுகையை நடத்தி கொத்பாவையும் ஓதி முடிப்பார்கள் பெரிய ஹஸரத். அவர்களது கொத்பா மிகச்சுருக்கமாக இருக்கும். 

வெவ்வேறு ஆண்டுகளில் இந்த மூன்று தொழுகையும் நடைபெற்று இருந்தாலும் அவர்களது கொத்பாவின் சாராம்சம் மூன்று தடவையும் ஒரே விடயந்தான். 

"உரிமைகளை கேட்கமுன்னர் கடமைகளை செய்யுங்கள்." "கடமைகளை செய்யாவிட்டால் விசாரணை உண்டு." 

"உரிமைகளை அறிந்திருப்பது போன்று நம் கடமைகளை அறிந்திருப்பதும் அதனை சரியான முறையில் நிறைவேற்ற அக்கறை எடுத்து பாடுபடுவதும் அவசியம்." "உரிமைகள் கிடைகாமல் போனால் அது நாளை கியாமத்தில் நமக்கு நன்மையாக வந்து சேரும்." "கடமைகளை செய்யத்தவறுவோமெனில் கியாமத்தில் தப்ப முடியாத நிலை ஏற்படலாம். " 

அவரது கொத்பா முடிந்ததும் துஆ கேட்பார்கள். 

துஆ முடிந்ததும் மக்கள் கலைந்து செல்வார்கள். 

மக்கள் அந்த மைதானத்தை விட்டு கலையும்போதே மேகங்கள் கூடி கருத்து மழை மெதுவாக பொழிய ஆரம்பிக்கும். 

மக்கள் வீடுகளை அடைய முன்னறே அடைமழையாக அந்த மழை உருவெடுக்கும். 

அந்த மூன்று தடவையுமே மழை பொழியும் என்ற நம்பிக்கையில் கையோடு குடைகளை சுமந்துவந்த மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் தொழுத அந்த இஸ்திஸ்கா தொழுகை மழையை கொண்டுவந்து சேர்பித்ததை வாழ்கையில் மறக்கவே முடியாது. மக்கள் அனைவரும் ஒருமுகமாய் அவன் பக்கம் திரும்பினால் அவன் இரக்கம் கொள்ளத்தவறுவதே இல்லை...!

8 comments:

  1. நானும் அந்த உத்தம மனிதரின் மாணவன். அல்லாஹ் அன்னாருக்கு தேகாரோக்கியத்தையும் கொடுத்து வாழ்நாளையும் அதிகரிக்கச் செய்வானாக.

    ReplyDelete
  2. Subahanallah! இது உண்மையாக இருந்தாலும் எங்களுக்கு 100% இவரின் துஆதான் காரணம் என்று கூற முடியாது! உண்மையிலேயே இவர் மிகவும் நல்ல ஈமான்தாரியாக இருக்கலாம் ஆனாலும் சிலநேரம் அந்த தொழுகையில் கலந்து கொண்ட ஒருவரது துஆ அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அல்லாஹு அஹலம்.
    ஏன் இந்த விடயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றால், கப்றுவணங்கிகள் இவர் மரணத்தின் பின் உடனே உண்டியல் வைத்து இவரை அவ்லியாவாக மாற்றி ஷிர்ககின்பால் இட்டுச்செலவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Dear voice Srilanka, I agreed with you comments

      Delete
  3. அப்துல்லாஹ் ஹஸ்ரத்துக்கு மக்கள் மத்தியில் தனி மரியாதை.மட்டுமல்லாமல்,அவர் எல்லோருடைய உள்ளத்திலும் பதியப்பட்டவர் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தருவானாக ஆமீன்

    ReplyDelete
  4. "உரிமைகளை கேட்க முன்னர் கடமைகளை செய்யுங்கள்." 👍👍

    அல்லாஹ் தன் அடியார்கள் யாரையும் கைவிட மாட்டான்.

    ReplyDelete
  5. Voice srilanka என்னை முந்திவிட்டீர்கள் ,இந்த கருத்தை நான் இட இருந்தேன்.بارك الله لك

    ReplyDelete
  6. Can anyone please translate this in english. May almighty Allah bless u all aameen

    ReplyDelete

Powered by Blogger.