Header Ads



கேள்விக்குறியாகும் தொழில்வாய்ப்பும், பழமையாகும் பல்கலைக்கழக பட்டதாரிகளும்..!!

ஏ.எல்.எம்.அஸ்ஹர் (ஹாமி)

இன்று எமது இலங்கைத் தாயகத்தில் இளம் தலைமுறையினர்கள் எதிர் நோக்கும் மிகப் பெரும் சவால் தொழில்யில்லாத் திண்டாட்டமாகும். ஆனால் இந்த மாபெரும் சவாலை எமது அரசு எப்போதுதான் ஈடு செய்து கொடுக்குமோ என்பதுதான் பெரும் கேள்விக்குறி?

உண்மையில் இந்த பெரும் சவாலை எதிர் நோக்குபவர்களில் பழமையடைந்த பல்கலைக்கழக பட்டதாரிகளும் விதிவிலக்கல்ல. மிகுந்த குடும்பக் கஷ்டத்தோடும் குடும்பப் பொறுப்புக்கலோடும் பல கடன் சுமைகளுக்கும் ஆளானவர்களாகத்தான் ஒவ்வொரு பட்டதாரிகளும் பட்டப் படிப்புக்களை நிறைவு செய்கிறார்கள்; எப்படியோ எமது அரசு எம்மைக் கைய்விடாது என்ற உயரிய எண்ணத்துடன் ஆனால் அவர்களுக்கென நிரந்தர தொழிலை வழங்குவதில் தான் அரசு ஆமை வேகத்தில் இருப்பது மிகவும் கவலையைத்தருகிறது 

இன்னும் இன்று எத்தனையோ மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லோர்களுக்கும் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைப்பதில்லை அதற்கு காரணம் அவர்களுக்கு அறிவுத்திறன் இல்லாமையல்ல ண புள்ளி எனும் பல்கலைக்கழக மானியத்தின் நியம மதிப்பீட்டளவின் வரையறையாகும். என்றாலும் மாணவர்கள் தங்களது முயற்சிகளை தளரவிடாது தனியார் தொழிணுற்பக்கல்லூரிகளில் தங்களுக்கு இயலுமான கலைகளில் கற்கை நெறியை பூர்திதி செய்கிறார்கள் எதற்காக எப்படியாவது ஓர் தொழில்வாய்ப்பை அரசிடம் அமைந்து கொள்ளவேண்டும் இதன் மூலம் தனது குடும்பப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஆனாலும் அதுவும் பல வருடக் கனவாகத்தான் செல்வது கவவையைத் தருகிறது. 

இன்னும் எமது தாயகத்தில் அரச தொழில் வாய்ப்பு 'பூனையின் வாய்ல் கிடைத்த எலியின் சம்பவமாகத்தான் அமைந்திருக்கின்றது' நான் ஏன் இவ்வாறு விழிக்கக் காரணம் இன்று எமது சமூகத்திற்கான தொழில் வாய்ப்புகள்லெல்லாம் எம்மால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களின் அனுமதியின் ஊடாகத்தான் வழங்கப்படுகிறது ஆனால் அவர்கள் ஓர் தொழிலைக் கொடுக்கும் போது அறிவு, தகமையைப் பார்த்து வழங்குகிறார்களா? என்றால் இல்லை இப்படி கவனித்து வழங்கும் அமைச்சர்களும் அரிது. ஆனால் பல லச்சங்கள் பந்தமாக வாங்கி வழங்குவதுதான் வழக்கமாக உள்ளது இதில் ஜெய்ப்பவர்கள் தகுதியற்ற பண வசதி படைத்தவர்களே! சாதாரண ஏழைக் குடிமகன் கல்விக்காகவும் செவவு செய்து தொழில் பெறவும் பணமா? என ஏங்கிக் கண்ணீர் வடிக்கும் காலம்.
   
எனவேதான் அவன் அரசின் மேல் இருந்த நம்பிக்கையில் நிராசையடைந்து இனி எம்மைப் பாதுகாத்துக் கொள்ள எமது தாயகத்தை துறந்து வெளிநாடு செல்வதுதான் முடிவு என நினைத்து வெளிநாட்டில் தனது அறிவு, திறமைகளை செலவு செய்து அங்கு பலன் அடைகின்றான். ஆனால் இதில் கவலை என்ன வென்றால் படித்த நாட்டில் படித்த கல்விக்குரிய வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதுதான் பெரும் கவலை.

என்றாலும் எமது அரசிடம் நாம் வேண்டிக் கொள்வது என்னவெனில் 'கடவுல் இவ் உலகில் யாரையும் வீணுக்காகப் படைக்க வில்லை' என்ற அல் குர்ஆனிய வசனத்திற்கமைய ஒவ்வொருவரிடமும் பல விதமான திறமைகள் இருக்கும் அதனை இனம் கண்டு தொழில் வாய்ப்பில் சந்தர்ப்பங்கள் வழங்க அரசு முன்வந்து எமது தாயகத்தை நற்பாதைக்கு இட்டுச்செல்ல வழியமைப்பதோடு பாடசாலைக் கல்வியில் சாதாரண தரம், உயர் தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கும், மதகுருமார்களுக்கும் போட்டிப் பரீட்சைகள் மூலம் சந்தர்ப்பம் வழங்கி அதில் தெரிவாகும் இளம் தலைமுறையினர்களுக்கு அத்துறையில் சில மாதங்கள் பயிற்சி வழங்குவதன் மூலம் எமது இளம் நெஞ்சங்களுக்கு தொழில் வாய்ப்பில் சந்தர்ப்பம் வழங்க முடியும்.    இல்லை எனின் பட்டதாரிகளும் மாடு மேய்க்கும் காலம் மிக விரைவில் என்பதனை அரசு எதிர்பாத்திருக்கட்டும்.

1 comment:

  1. அரச செலவிலே பட்டம் பெற்றது போதாதென அரசிடமே தொழிலும் தருமாறு வற்புறுத்துவது பெற்றுக்கொண்ட பட்டத்துக்கே கேவலம்.
    கல்வி தன்னம்பிக்கையையும் முயற்சியையும் மேம்படுத்துவதே.

    ReplyDelete

Powered by Blogger.