Header Ads



பாரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை

கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச பொருளாதார தரப்படுத்தலின் பிரகாரம் இலங்கையின் பொருளாதார நிலை வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மஹிந்த அரசின் கடைசிக்காலம் வரை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் இருந்தது.

வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் நாணய கையிருப்பு, கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் என்பன வருடாந்தம் அதிகரித்துக் கொண்டு வந்தது. இதன் காரணமாக ஆசியாவில் மிக வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

எனினும் மஹிந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த ஹர்ச டி சில்வா உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார விற்பன்னர்கள், தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கையை சொர்க்காபுரியாக மாற்றிக் காட்டுவதாக உறுதிமொழி அளித்திருந்தார்கள்.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் கடந்து போன வருடம் குறித்த பொருளாதார தரப்படுத்தலில் இலங்கை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் நாணயக் கையிருப்பும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. அத்துடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலையும் இலங்கை படிப்படியாக இழந்து கொண்டிருப்பதாக குறித்த தரப்படுத்தல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கை வெளிநாட்டுக் கடன்களை பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். அதன் மூலமாக பாரிய பொருளாதார நெருக்கடியொன்றை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.