அரச புலனாய்வுப் பிரிவுகளை, மீளவும் செயற்படுத்த பிரதமர் உத்தரவு
அரச புலனாய்வுப் பிரிவுகளை மீளவும் செயற்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இயங்கி வந்த அரச புலனாய்வுப் பிரிவு அலகுகள் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது.
எனினும் இதன்போது மீளவும் அரச புலனாய்வுப் பிரிவு அலகுகளை அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஆரம்பிக்குமாறு பிரதமர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பிரிவு ரத்து செய்யப்பட்டதனால் பாதாள உலகக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பிரதமருக்கு அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரச புலனாய்வுப் பிரிவினை செயற்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதேசத்தில் இடம்பெறும் கொலைகள் கொள்ளைகள் போன்ற குற்றச் செயல்களுக்கான பொறுப்பினை அந்தந்த பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Post a Comment