Header Ads



நான் தலைவர் பதவிக்கு, தகுதி இல்லாதவன் - அப்ரிடி


பாகிஸ்தான் அணியின் தலைவராக இருக்க தான் தகுதி இல்லாதவர் என்று சாகித் அப்ரிடி விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ண தொடரில் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வென்றது. மற்ற 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சாயித் அப்ரிடி கூறுகையில், ”ஒரு வீரர் என்ற முறையில் நான் தகுதியானவர். ஆனால் தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் கிடையாது.

நாடு திரும்பிய பிறகு எனது ஓய்வு முடிவை அறிவிப்பேன். ஊடகங்களால் நான் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானேன்.

போட்டியின் போது எங்களுக்கு உற்சாகம் அளித்த கொல்கத்தா மற்றும் காஷ்மீர் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சிறப்பான உபசரிப்பு அளித்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றியை தெரிவி்த்துக் கொள்கிறேன்“ என்று கூறியுள்ளார்.s

No comments

Powered by Blogger.