Header Ads



எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்து, மட்டக்களப்பு மாணவி சாதனை

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.

என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் பலருக்கு உள்ள எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த இயந்திரமானது வீட்டில் உள்ள பாவனைக்கு உதவாத கழிவு பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியின் போது இரண்டாம் இடத்தினையும், மட்டக்களப்பு மட்டத்தில் 1ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

அண்மைக் காலமாக எலிக்காய்ச்சல் மூலம் பலர் உயிரிழந்துள்ளார்கள். அந்த வகையில் இந்த சிறுமியின் கண்டுபிடிப்பு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2 comments:

  1. வாழ்த்துக்கள்.இம்மாணவி சிறுபான்மையை சேர்ந்தவர் என்பதற்காக எதோ ஆயுதம் தயாரித்தார் என்று சில இனவாதிகள் சொல்லாமல் இருந்தால் சரி.

    ReplyDelete

Powered by Blogger.