தவ்ஹீத் ஜமாத் விவகாரத்தில், பொலிஸ் பொறுப்பதிகாரி கப்பார் அத்துமீறினாரா..?
கடந்த 19.02.2016ன் போது சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ.ல.த. ஜமாஅத்தினரின் பள்ளிவாசலில் (மர்கஸ்) மார்க்க சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தீடிரென்று கல்முனை பொலீஸார் அத்துமீறினா்.
குறித்த தினத்தில் மாலை 5.00 மணிமுதல் பள்ளிவாசலில் மார்க்க சொற்பொாழிவொன்றை ஏற்பாடு செய்திருந்த வேளை கல்முனை நிலைய பொறுப்பதிகாரியான கப்பார் (C.I) அவர்களின் தலைமையில் சில பொலீஸ் உத்தியோகத்தர்கள் திடீரென்று பள்ளிவாசல் காணியில் அத்துமீறி அங்கிருந்த பொருட்களைான சவுன்ட் பொக்ஸ், ஸ்டான்ட் போன்ற பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி, மார்க்க சொற்பொழிவை கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பீதியை உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பள்ளிவாசலுக்குள் (மர்கஸ்) சப்பாத்து காலுடன் உள்நுழைய எத்தனித்த திரு.கப்பார் என்ற பொலீஸ் உத்தியோகத்தரை சப்பாத்து காலுடன் உள்நுழைய வேண்டாம் எனவும், சப்பாத்தை கழற்றிவிட்டு வருமாறும் வேண்டப்பட்டார். எதையுமே கண்டுகொள்ளாத குறித்த அதிகாரியானவர் உள்நுழைய எத்தினித்த போதே அங்கிருந்த பொது மக்களால் தடுக்கப்பட்டார்.
பின்னர் ஆத்திரமடைந்தவர் அங்கிருந்த மக்கள் சிலபேருக்கு அடித்து வைத்தியசாலைக்கு செல்லுமளவு காயபடுத்தி வீதியில் சென்று கொண்டிருந்த மக்களின் பாதைக்கு இடையூறு விளைவித்து அதிகாரத் தொணியை பரை சாற்றினார்.
அதேநேரம் குறித்த தினத்தில் ஸ்ரீ.ல.த.ஜமாஅத்தினரின் பள்ளிவாசலுக்கு முன் வளாகத்தில் எதிர்க்கருத்துடையவர்களுக்கு பொதுக்கூட்டத்திற்கான அனுமதியை வழங்கி சமாதானக் குந்தகம் விளைவிக்கும் செயலுக்கும் வித்திட்டனர்.
அதுமட்டுமல்லாமல் மனிதநேயப் பணியான இரத்ததானத்தை 21.02.2016இல் ஸ்ரீ.ல.த.ஜமாஅத்தினா் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலை நாடப்பட்டிருந்தது. இந்நிகழ்வை தடுக்கும் முகமாக ஆதார வைத்தியசாலை நிர்வாகிகளை கல்முனை பொலீஸார் விரட்டி இரத்ததானம் பெற குறித்த இடத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் பயமுறுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட இரத்ததானம் தடுக்கப்பட்டதற்கும் கல்முனை பொலீஸ் நிலைய அதிகாரிகள் காரணம் என ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் Dr..ஹில்மி கூறினார்.
எனவே மதநிந்தனை, சமாதானத்திற்கு குந்தகம், பொதுமக்களை பயமுறுத்தல், வைத்திய நிர்வாகத்தை அச்சப்படுத்தல், அடாவடித்தனம், சட்டவிரோத போக்கு போன்ற பல குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சாய்ந்தமருது கிளை நிர்வாகிகள் தெரிவித்துக் கொண்டனர். அத்துடன் இவ்வடாவடித்தனங்களை மறைத்து தான் தப்பித் கொள்ளவே மார்க்க சொற்பொழிவில் கலந்த கொண்ட அத்தனை பேரையும் கைது செய்து வழக்கு செய்துள்ளனர் கல்முனை பொலீஸார். கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் அடுத்த கட்ட விசாரணை கல்முனை மன்றில் எதிர்வரும் 13.07.2016ற்கு விளக்கத்திற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
தவ் கும்பல்களுக்கு ஒரு ஆயுத பிரிவு தேவைப்படுகிறது. ஆயுத பிரிவு ஒன்று இருந்திருந்தால் இந்த பிரச்சன வந்திருக்காது. இரத்ததானமும் தாராளமாக நடந்திருக்கும். ஒருகாலத்தில் இவர்கள் அந்த இலக்கை அடையக்கூடும்
ReplyDeleteஊரில் உள்ளவர்கள், இமாம்கள், சஹாபாக்கள், மவ்லவிகள், சக இயக்கத்தவர்கள் என்று எல்லோரையுமே தொண்டை கிழிய தூற்றிவிட்டு, வருடத்திற்கு இரண்டு இரத்த தானங்களை ஏற்பாடு செய்துவிடுவதால் எல்லாம் சரியாகிவிடுவதில்லை.
ReplyDeleteசப்பாத்துக் காலுடன் பள்ளிவாசலுக்குள் நுழையக் கூடாது என்று குரான், ஹதீஸில் எந்தத் தடையும் இல்லை, மாறாக, நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் நபவியில் செருப்புடன் தொழுகை நடாத்திய ஹதீஸ் உள்ளது.
This fitna group should be taught a lesson in how to respect others feelings , well done mr Gaffar
ReplyDeleteஒரு மனிதன் சுதந்திரமாக ஒரு மதத்தை பின்பற்ற முடியும் என்னும்போது இக்காக்கிச்சட்டை மட்டும் ஏன் குறிப்பிட்ட சாராரை நிந்திக்க வேண்டும் ?
ReplyDeleteபெயர் கப்பார் என்று போடப்பட்டுள்ளது. இவர் ஒரு முஸ்லிமாக இருந்து எப்படி புனித தளத்தினுள் சப்பாத்து காலுடன் நுழைவது ?
சிங்களவனுக்கு இருக்கும் இங்கிதம் கூட இவர்களுக்கு இல்லையா ?
HELO SAWTHUL HAQ.சப்பாத்துக்காளுடன் தொழ வேண்டும் யூதர்களுக்கு மற்றம் செய்ய வேண்டும் என்பது ஹதீஸ் அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவ்விடத்தில் எந்த தொனியில் நடந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும் முஸ்லிமாக இருக்கும் ஒரு போலிஸ் உயர் அதிகாரி இவ்வாறு நடந்தால் அந்நிய மதத்தை சேர்ந்த அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்.சப்பாத்தை பாவிக்கும் முறையில்தான் தங்கியுள்ளது சுன்னாவா ஹராமா என்பது இங்கு எந்த விதத்தில் நடந்துள்ளது.நான் ஏன் கண்களால் கண்ட ஒரு காட்சியை இங்கு பதிவு செய்கிறேன்.எனது சொந்த மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் எனது சொந்த ஊர் பள்ளியில் எதிர் தரப்பினர்களுக்கு அடிப்பதற்காக பள்ளி வாசலுக்குள் செருப்புக்காலுடன் நுழைந்து அட்டகாசம் செய்தார் கடைசி நிலைமை இந்த உலகிலே கால்கள் கழட்டப்பட்டு மிகவும் கஷ்டமான நிலையில் மரணமடைந்தார்.இந்த செய்தியை எனது மாவட்ட மக்கள் பார்த்தால் புரிந்து கொள்வார்கள்.அல்லாஹ்வுடைய மாளிகையில் மோதியவன் தலை நிமிர்ந்த வரலாறு கிடையாது.அது தவ்ஹீதாக இருக்கட்டும் தப்ளிக்காக இருக்கட்டும் அது வேறு பிரச்சினை.அல்லாஹ்வை சுஜுது செய்த இடங்கள் கண்ணியத்துக்குரிய இடங்கள்.மறந்துவிடாதீர்கள்.
ReplyDeleteHELO SAWTHUL HAQ.சப்பாத்துக்காளுடன் தொழ வேண்டும் யூதர்களுக்கு மற்றம் செய்ய வேண்டும் என்பது ஹதீஸ் அது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவ்விடத்தில் எந்த தொனியில் நடந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும் முஸ்லிமாக இருக்கும் ஒரு போலிஸ் உயர் அதிகாரி இவ்வாறு நடந்தால் அந்நிய மதத்தை சேர்ந்த அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்.சப்பாத்தை பாவிக்கும் முறையில்தான் தங்கியுள்ளது சுன்னாவா ஹராமா என்பது இங்கு எந்த விதத்தில் நடந்துள்ளது.நான் ஏன் கண்களால் கண்ட ஒரு காட்சியை இங்கு பதிவு செய்கிறேன்.எனது சொந்த மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் எனது சொந்த ஊர் பள்ளியில் எதிர் தரப்பினர்களுக்கு அடிப்பதற்காக பள்ளி வாசலுக்குள் செருப்புக்காலுடன் நுழைந்து அட்டகாசம் செய்தார் கடைசி நிலைமை இந்த உலகிலே கால்கள் கழட்டப்பட்டு மிகவும் கஷ்டமான நிலையில் மரணமடைந்தார்.இந்த செய்தியை எனது மாவட்ட மக்கள் பார்த்தால் புரிந்து கொள்வார்கள்.அல்லாஹ்வுடைய மாளிகையில் மோதியவன் தலை நிமிர்ந்த வரலாறு கிடையாது.அது தவ்ஹீதாக இருக்கட்டும் தப்ளிக்காக இருக்கட்டும் அது வேறு பிரச்சினை.அல்லாஹ்வை சுஜுது செய்த இடங்கள் கண்ணியத்துக்குரிய இடங்கள்.மறந்துவிடாதீர்கள்.
ReplyDeleteதம்பி சவ்துல், பாவம் எங்கு நடந்தாலும் அதை தடுக்க எல்லோரும் மமுன் வர வேண்டும். மாறாக தடுக்காத உங்களை விட்டு விட்டு தடுப்பவர்களையும் தடுக்க நினைப்பவர்களையும் குறை கூறுவது தவறு.
ReplyDeleteஇலங்கை நாட்டில் எல்லோருக்கும் தங்களது கருத்தை சொல்லவும் தான் விரும்பிய மார்க்கத்தை பின்பற்றவும் அதை பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு. பொலிசைக் கூட்டிவிட்டு புதினம் பார்ப்பது ஆரோக்கியமானதல்ல. எல்லோருக்கும் ஒரு பொறி முறைதான், இயக்க வெறி பிடித்து அலைவதை விட அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்னதைப்படித்து புரிந்து நடப்பவர் மட்டும் இறுதியில் வெற்றி பெறுவார்.
ReplyDelete