பிரதமர் வேட்பாளராக, கோத்தபாயவை பரிந்துரைத்த மைத்திரி - நிராகரித்த மகிந்த
கடந்த பொது தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை நிராகரித்ததாக அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்லேதலவின்ன ரதனஜோதி தர்ம வித்தியாலயத்தில் 27/03/2016 மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றைப் பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக கொண்டு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தின் போது விருப்பம் தெரிவித்திருந்தார்.
எனினும், இந்த யோசனைக்கு மஹிந்த ராஜபக்சவே முதலில் எதிரப்பு தெரிவித்ததாக அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment