மைத்திரி தலைமையில் இன்று, விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து இன்று மாலை 3.00 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
குறிப்பாக கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகைகள் அவற்றை எவ்வாறு மீள செலுத்துவது என்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
விசேட கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா நேற்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக காணப்படுகின்றது, காலியான திறைசேரி ஒன்றே எமக்குக் கிடைத்துள்ளது.
செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை பற்றி தற்போதுதான் அறிந்து கொண்டோம். குறுங்கால அடிப்படையில் பெற்றுக் கொண்ட கடன் பற்றிய விபரங்களே காணப்படுகின்றன.
நீண்ட கால அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment