Header Ads



சிகிரியாவில் இருந்து பறக்கப்போகும், கூகுள் பலூன்

இணையத்­தள சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான கூகுள் பலூன் பரி­சோ­தனை எதிர்­வரும் 30 ஆம் திகதி சிகி­ரி­யாவில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இதன்­போது இளை­ஞர்கள் மற்றும் ஊட­கங்­க­ளுக்கு குறித்த பலூன் பரி­சோ­தனை தொடர்பில் தெளி­வூட்­டப்­ப­ட­வுள்­ள­தாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கூகுள் நிறு­வ­னத்­தினால் அண்­மையில் பலூன் பரி­சோ­தனை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன்­படி அதற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன்­பி­ர­காரம் இது குறித்து இளை­ஞர்­களின் மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஊட­கங்­க­ளுக்கும் தெளிப்படுத்தும் வகையில் பலன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.