இலங்கையில் வரலாறு காணாத வகையில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
இலங்கையில் வரலாறு காணாத வகையில் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 148 ரூபாவினை தாண்டிச் சென்றுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 148 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின் அடிப்படையில் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை 148.91 ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி நாட்டின் இறக்குமதி பொருட்களின் விலைகளிலும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்டுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
Post a Comment