அமெரிக்காவை ஆளுமாறு கனடா, பிரதமருக்கு உருக்கமான அழைப்பு
அமெரிக்காவில்
தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்பதால், அந்நாட்டில் அதிபர்
வேட்பாளராக போட்டியிடுமாறு வாலிபர்கள் இருவர் கனேடிய பிரதமரிடம்
கெஞ்சியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துக்கொண்டார்.
அப்போது, நிகழ்ச்சியின் இறுதியில் இரண்டு அமெரிக்க வாலிபர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் மண்டியிட்டு ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
அதில், ‘எங்கள் நாட்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவர் கூட தகுதியானவர்கள் இல்லை. அனைவரும் மோசமானவர்கள்…..பயங்கரமானவர்கள்.
இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்ற நீங்கள்(கனேடிய பிரதமர்) அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும்’. என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
வாலிபர்களின் கோரிக்கையால் ஒரு கணம் அதிர்ந்துபோன பிரதமர் பின்னர் சிரித்துக்கொண்டு அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.
‘நான் ஏற்கனவே கனடா நாட்டிற்கு பிரதமராக பணியாற்றி வருகிறேன் என்பது உங்கள் இருவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். எனக்கு அந்த பணியை மிகவும் பிடித்துள்ளது’ என கூறி வாலிபர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க வாலிபர்களின் இந்த கோரிக்கை தொடர்பான வீடியோ நேற்று முன் தினம் வெளியாகி இணையத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Yes this is their real feeling
ReplyDelete"வறுமை"யாகிப்போன.. வல்லரசின் அரசியல்!
ReplyDelete"வெட்டு"க்"குத்து"க்கு தயாரான சூலேந்திய அமெரிக்க சிலைகள்!
காவாலி ஒருவன் தேர்தலில் நிற்பதால் அனைவருக்கும் பயம் பிடித்துள்ளது
ReplyDeleteஅரசீயல் பிச்சை
ReplyDelete