Header Ads



தகாத வார்த்தைகளால், திட்டிய அமைச்சர்

ஊடகவியலாளர் ஓருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு எதிராக இளம் ஊடகவியலாளர் சம்மேளனம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 

களனி பல்கலைக்கழகத்தில் அமைச்சரினால் விரிவுரையாளர் நியமிக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் தொலைபேசி மூலம் ஊடகவியலாளர் அமித் மருரங்க வினவியபோது அமைச்சர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இது தொடர்பான ஒலிப்பதிவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர் குறித்த ஊடகவியலாளரிடம் நீங்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டதுடன் தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே குறித்த பதவியை நிரப்பியதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.