Header Ads



ஒஸ்மானியா, ஹதீஜா மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நடவடிக்கை - ஒத்துழைக்க கோரிக்கை

-Mohamed Ameen-

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது சமூகத்தின் கல்வி நிலை காரணமாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன குறிப்பாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் பெறுபேறுகள் ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே இந்த வருடம் GCE O/L மாணவர்களை சிறந்த நிலையில் தயார்படுத்த வேண்டியுள்ளது.

இதனடிப்படையிலே ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிலையம் மாணவர்களுக்கான பகுதி நேர வகுப்புகளை ஆரம்பித்துள்ளது இருந்தபோதும் மாணவர்கள் வரவுகள் குறைவாகவே இருப்பது கவலைக்குரிய விடயமே!

இந்த விடயத்தில் பெற்றோர்கள் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் சென்ற மாதம் பெற்றோருக்கான மாணவர்கள் விடயமாக ஒரு கருத்தரங்கிற்கு அழைத்தபோது ஒரு சிலரே கலந்து கொண்டனர் இந்நிலை நீடிப்பது நமது சமூகத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தாது!

இன்ஷா அல்லாஹ் 4 ம் மாதம் சில கல்விமான்களை அழைத்து பெற்றோருக்கும் மாணவர்களுக்குமாக நமது மாணவர்களின் கல்வியின் எதிர்காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடாத்த தீர்மானித்துள்ளோம்.

இன்று நாட்டில் குக்கிராமங்களிளும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிளும் மாணவர்கள் 9 A என்ற சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள் நாம் நமது சூழலை மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகாலையிலும் இரவிலும் வீட்டில் மாணவர்களை கல்வி கற்பதற்கு ஊக்குவிற்பதோடு மாத்திரம் அல்லாமல் அதற்கேற்ப சூழலையும் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் ஆசிரிய சமூகமே விடா முயற்சி எடுங்கள் இவ்வாண்டிலாவது உங்கள் மாணவர்களை முழுமையாக சித்தி பெறச்செய்யுங்கள் இது உங்கள் கடமையும் கூடவே!

இறுதியாக மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்கள் இவர்களது கைகளிளே ஒரு பாடசாலையின் வளர்ச்சி தங்கியுள்ளது. நலன்விரும்பிகள் எப்போதுமே நான்காவது பட்சமே  ஹிரா கல்வி மறுமலர்சி நிறுவனமானது.

ஒஸ்மானியா கதீஜா கல்லூரிகளனது கல்வி வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான ஒத்துளைப்புகளை வழங்குவதற்கு என்றும் தயாராகவே உள்ளது.

No comments

Powered by Blogger.