Header Ads



என்னிடம் அனுமதி பெறாமல், பிக்குகளை கைதுசெய்ய வேண்டாம் - ஜனாதிபதி


என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம், அவ்வாறு கைது செய்வதாயின் அதற்கு முன் என்னிடம் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, விளக்கமறியலில் வைத்தமை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்புகள் காரணமாகவே ஜனாதிபதி பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உடுவே தம்மாலோக்க தேரர், சட்டவிரோதமாக யானை குட்டியொன்றை தனது விகாரையில் வளர்த்து வந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும்  நேற்று 60 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. Mr My3 , Make your order equal to the clergy of all religions.
    Some Buddhist monks are a lawless lot who deserve proper
    discipline from the long arm of the law . They are not true
    to their robe ! Why are you trying to interfere with the
    judicial procedure only in the case of monks ? Why are you
    trying to put them above the law ? Common law should be
    applied to all citizens and that's the aim of the good
    governance . I wish this news report is a mistake .

    ReplyDelete
  2. இது நியாயமற்றது!

    அப்படியானால் சட்டம் காவிகளுக்கு மட்டும் வேறு மாதிரி இயங்கப்போகின்றதா என்ன..? மதகுருமார்களைக் கைதுசெய்வது குறிப்பிட்ட சமூக மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை பிறர் மத்தியில் கேலிக்குள்ளாக்கும் வாய்ப்பிருப்பதால், கைதுசெய்வதற்கு முன்னர் அவர்கள் மீதான குற்றத்தை நன்கு பரிசீலிப்பது அவசியம் என்றாவது கூறியிருக்கலாம்.

    ReplyDelete
  3. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது!
    இனவாத தேரர்களின் முந்தானையில் தொங்க முனையும் மைத்திரி, தன் சுயரூபத்தை அடிக்கடி வெளிப்படுத்துகிறார். எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தானே! மதிப்பிற்குரிய சோபித தேரர் இல்லாமல் போனது இவர்களுக்கு கொண்டாட்டம்தான்!

    ReplyDelete
  4. பிக்குகள் உங்களிடம் கேட்டா குற்றச் செயல்கலில் ஈடுபடுகிறார்கள் ? அவர்கள் குற்றச் செயல் செய்தால் தன்டிக்கப்பட மாட்டார்களா?

    ReplyDelete
  5. Poohappooha therium intha poovin Vasam???????????????????????????

    ReplyDelete
  6. ஜனாதிபதியிடம் முன் அறிவித்தல் செய்வதென்றால் ஏன் கைது செய்ய வேண்டும்.ஆக ஜனாதிபதியும் பக்க சார்பாகவுள்ளார்.

    ReplyDelete
  7. சட்டத்தை அவர் கையில் எடுக்கிறார். என்னமோ இவர் சட்ட விடயங்களில் தனது செல்வாக்கை ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன் என்று சொன்னது ஞாபகம்.
    பொறுத்திருக்கும் வேதாலம் மீண்டும் முறுங்கை மரம் ஏர வெகுநாட்களாகாது. அவரின் சுயரூபம் மெதுவாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இது வெறும் Trailer தான் main picture இனிதான் வரும்.

    ReplyDelete
  8. There is something wrong with My3

    ReplyDelete
  9. Mahinda Regime protected the wrong doers. People wanted to
    Bring to justice those wrong doers So,My3 was elected as our president in order to punish them. Unfortunately My3 Regime does nothing to punish the wrong doers!

    ReplyDelete
  10. What a shame order of this ? law should be same to all, this what we expected from yahapalanaya but unfortunately something happening different these days.

    ReplyDelete

Powered by Blogger.