வேகமாக பரவும் புகைப்படங்கள், தேடப்படும் குற்றவாளிகள் என அறிவிப்பு
கழுகு ஒன்றை மிகவும் கொடுரமாக துன்புறுத்தி கொலை செய்த நபர்கள் பற்றியும் குறித்த நபர்களால் பரிதாபமாக கொல்லப்பட்ட கழுகு தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவலாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்த புகைப்படங்கள் கெலேபந்த பிரதேசத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2009 இலக்கம் 22 இன் படி விலங்குகள் மற்றும் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் படி வன விலங்ககளை மிகவும் கொடுரமாக இம்சித்து கொலை செய்வது தண்டணைக்குறிய குற்றம் என்பதை சுட்டிக்காட்டி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FREEDOM SRILANKA FOUNTATION மற்றும் LET THEM LIVE ஆகிய அமைப்புக்களே குறித்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் 0703303022 மற்றும் 0713664019 ஆகிய தொலைபேசி எண்களோடு தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Please give them proper punishment so that no one ever willing do such atrocities against a bird or an animal.
ReplyDeleteநாள் விட்டு நாள் ஆவர்த்தனமாக பல தடவைகள் தோல் உறியும்வரை சவுக்கடி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ReplyDelete