Header Ads



"யாழ்ப்பாண முஸ்லிம்களும், மீள்குடியேற்றமும்"


-Jan Mohamed-

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அதிகாரிகளினால் மீள்கட்டுமானத்துக்கான உதவிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக இழுத்தடிக்கப் பட்டு வருகின்றது. இவற்றை பார்த்துக் கொண்டு வடமாகாண சபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. தாம் செய்து விட்ட வரலாற்றுத் துரோகத்துக்கு தம்முடைய பணமின்றி இந்திய அரசாங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் பணத்தைக் கொண்டு செய்யக் கூடிய ஒரு பாவ மீட்சியைக் கூட தமிழர்கள் செய்யத் தயாரில்லை என்பது அவர்களின் உரிமைப் போராட்டம் எத்தகைய காழ்ப்புணர்ச்சிகளுடனும் தீங்கான நோக்கங்களுடனும் கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் கல்வித் துறையை எப்படி பயன் படுத்தலாம் என்பது பற்றி இப்போது நாம் கவனம் செலுத்துவோம்.

இன்று க.பொ.த சாதாரண தரம் படித்து சித்தியடைந்தவர்கள் மூன்று படங்களில் சித்தியடைந்தவர்கள் எல்லோரும் செய்யக் கூடிய அல்லது கற்கக் கூடிய கல்வி நெறி தான் முன்னேரிய கணக்கியல் நுட்பம் எனும் கற்கை நெறியாகும். இது பாடசாலை நேரத்திலும் மாலை நேர வகுப்புகளாகவும் நடத்தப் பட முடியும். இவ்வாறு கட்க தயாரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கலூம் யாழ்ப்பானத்துக்கு வெளியே வாழ்கின்றவர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களும் உள்வாங்கப் படவேண்டும். ஆரம்பத்தில் இக்கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப் படவேண்டும். யாழ் ஒஸ்மானியாவில் தாராளமாக மாணவர் தங்குமிடம் வழங்க தற்போது கட்டிடங்கள் உள்ளன. க.பொ.த .உயர் தர வகுப்புக்களுடன் இக்கற்கை நெறியைச் சேர்த்து நடத்துவதன் மூலம் உயர் தர வகுப்பையும் ஒஸ்மானியாவில் ஆரம்பிக்க முடியும். அத்துடன் ஆரம்பத்தில் ஐம்பது மாணவர்களை உள்வாங்குவதன் மூலம் தரமான அடித்தளம் ஒன்றையும் பாடசாலை பெற்றுக்கொள்ளும்.

இந்த கற்கை நெறிக்கு இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் இருந்தால் போதுமானது. அவர்களுக்கான சம்பளம் மொத்தமாக ஒரு இலட்சம் வரும். தங்குமிடத்துடன் கூடிய மாணவர் ஒருவருக்கான உணவுச் செலவு மாதமொன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய்கள் செலவாகும். கட்டில் மெத்தை தலையணை பெட்சீட் போன்றவற்றுக்கான செலவாக மாணவர் ஒருவருக்கு 13000 ரூபா செலவாகும். இந்தக் கட்டில்கள் பத்து பதினைந்து வருடங்கள் பாவிக்கக் கூடியவை. மெத்தைகள் ஐந்து வருதத்துக்கு ஒரு தடவை மாற்ற வேண்டி வரும். 

ஆரம்ப கட்டில் மெத்தைச் செலவு - 50 மாணவர் # 13,000 = 650,000 ரூபாய்
உணவுச் செலவுகள் (மூவேளை ) மாதமொன்றுக்கு - 4,000/- # 50 = 200,000 ரூபாய் (வருடத்துக்கு 24 இலட்சம்)

ஆசிரியர்களுக்கான சம்பளம் - மாதத்துக்கு 100,000/-. வருடத்துக்கு 1,200,000 /-

இத்திட்டத்த்துக்கு முதல் மாத்ததில் 10 இலட்சம் ரூபாவும் தொடர்ந்து வரும் மாதங்களில் மூன்று இலட்சம் ரூபாவும் தேவைப் படும். இதனை நடைமுறைப் படுத்த ஜே.எம். ஏ யூ கே போன்ற அமைப்புகள் முன்வரலாம்.இதனை ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் ஆலோசனைகள் என்பவற்றை இலவசமாக வழங்க நாம் தயாராக இருகின்றோம். பாடசாலை அதிபர் மற்றும் அமைப்புக்களை எம்முடன் தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு குறிப்பிட்ட மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் கூடிய கற்கை நெறியை வழங்குவதன் மூலம் ஒஸ்மானியாவைல் உயர்தர் வர்த்தக பிரிவை ஆரம்பிப்பதன் மூலம் கல்வி நிலையை மேம் படுத்தலாம். தொடர்ந்து கம்பியூட்டர் கற்கை நெறிகள் போன்றவற்றை ஆரம்பிக்கலாம். இதனால் கீழ் வகுப்புகளுக்கான கல்வியும் வளர்ச்சியடையும். இவ்வாறு செய்வதன் மூலம் வெளியூர்களில் வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கல்வி சம்பந்தமாக எழுப்பு கேள்விகளுக்கு விடை கிடைப்பதுடன் எதிர் காலத்தில் அதிக குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற வழியேற்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தான் நாம் போடும் நல்ல திட்டங்களை நன்கு அறிந்தவனாக உள்ளான். எனவே யா அல்லாஹ் எமது திட்டங்களை நடைமுறைப்படுத்த நல்லுள்ளம் கொண்டவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு வசதி வாய்ப்புகளையும் கொடுப்பாயாக! ஆமீன்

1 comment:

  1. MashaAllah it is a very good initiative to up bring our society. Also I would like to add my opinion, that is who ever get this service and when they start to earn, they have to sponsor a another student .

    ReplyDelete

Powered by Blogger.