"முஸ்லிம் சிவில் அமைப்பு"
-நஜீப் பின் கபூர்-
முஸ்லிம் சமூகத்திற்குத் தேசிய மட்டத்தில் பலம் வாய்ந்த சிவில் அமைப்பொன்று தேவை என்ற விடயம் தொடர்பாக தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. ஊடகங்களிலும் இது பற்றி செய்திகள்- கட்டுரைகள் வந்து கொண்டிகின்றது. நாமும் பல கட்டுரைகளில் இது பற்றி சொல்லி வந்திருக்கின்றோம்.
சர்வதேச சமூகம் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அவலங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் மத்தியில் செல்வாக்கான சிவில் அமைப்பொன்று இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம்.
அத்துடன் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகத் துவங்கிய அரசியல் சக்திகள் இந்தப் பணியை உரிய முறையில் முன்னெடுக்க வில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள், உள்ளுராட்சி மன்ற மறுசீர் அமைப்பு மற்றும் உத்தேச யாப்பு விவகாரத்தில் அவர்கள் நடந்து கொண்ட முறையை இங்கு சுட்டிக் காட்ட முடியும்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது பிறப்பெடுத்துள்ள சிவில் அமைப்பு, கிழக்கை மையப்படுத்தி தனது நடவடிக்கைளை முன்னெடுக்க நாடுகின்ற அமைப்பாக இருந்தாலும், இந்த அமைப்பு ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களையும் சிந்திக்கத் தூண்டி இருக்கின்றது.
முஸ்லிம்கள் மத்தியில் பலம் வாய்ந்த சிவில் அமைப்பொன்றின் அவசியம் பற்றிய கலந்துறையாடல்கள் ஏற்கெனவே துவங்கி இருக்கின்றது. என்ற சந்தோஷமான செய்தியை முஸ்லிம் சமூகத்திற்கு தெரியப்படுத்துவதுடன், இது பற்றி பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்கெனவே நடத்தி முடித்திருக்கின்றார்கள்.
இந்தக் குழுவினர் தற்போது மாவட்ட ரீதியில் முக்கியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் இந்த அமைப்பு தொடர்பான யாப்பையும் அவர்கள் வடிவமைத்து வருவதுடன் இந்த அமைப்பில் உள்வாங்கப்படுகின்றவர்களுக்கான ஒழுக்கக் கோவையையும் அவர்கள் தற்போது தயாரித்து வருகின்றனர்.
இந்த அமைப்பு எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னை ஒரு அரசியல் அமைப்பாக முயற்சிக்காது என்று அந்த அமைப்புத் தொடர்பாக முனைப்புடன் செயலாற்றுகின்ற சட்டத்தரணி இந்த குறிப்பை முன்வைக்கின்றவனிடத்தில் உறுதியாகக் குறிப்பிட்டார்.
இவர்களின் வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு சமூகப் பணி செய்ய ஆர்வமுள்ளவர்களை இந்த அமைப்பு உள்வாங்கிக் கொள்ளத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிடுகின்ற இதன் ஏற்பாட்டளர்கள், இது பற்றிய பகிரங்க அறிவிப்பை விரைவில் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர இருப்பதாவும் தெரிவித்தனர். தற்போது நாட்டில் இயங்குகின்ற தனது சமூகத்தின் சிவில் அமைப்புக்களுடனும் இவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ள இருக்கின்றார்கள்.
இந்த சிவில் அமைப்பின் கட்டமைப்பை உரிய விதத்தில் வடிவமைத்துக் கொள்ளும் வரை தாம் இந்த அமைப்பைப் பற்றி விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுவதுடன், எமது இந்த முயற்ச்சி வெற்றி பெற நமது சமூக ஊடகங்கள் தமக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.
நாட்டில் காணப்படும் அனைத்து ஜூம்மா பள்ளிவாயல்களின் பிரதிநிதிகளும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் .
ReplyDeleteகடந்த காலங்களிஇவ்வாறான அமைப்பு தேவையானதை உணர்ந்துதான் அனைத்து இயக்கங்களும் ஒன்று இணைந்து சூரா சபை உருவாக்கப்பட்டது அது இப்போது செல்லா காசாக மாறிவிட்டது.இப்போது புதிய பெயரில் சிவில் அமைப்பு எந்த பெயரில் எந்த அமைப்பை உருவாக்கினாலும் முழுமையாக அல்லாஹ்வுடைய அச்சமும் நபியுடைய வாழ்க்கையும் பின்பற்றப்படவில்லையன்றால் அதில் வெற்றியடைமுடியாது .வாயில் மட்டும் சமூதாய பேச்சு உள்ளத்தில் சுய நலமும் நான் என்ற பெருமையும் இதை வைத்து எதிர் காலத்தில் தன்னுடைய தேவைகளை சாதிக்க முடியும் என்ற அவதந்திரமும் இருக்கும் வரையில் அல்லாஹ்வின் உதவி வராது,கடுமையான கொலைவெறி எதிரிகளாக இருந்த மக்கா காபீர்களை நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு ஒன்றுவிட்ட சகோதரர்களாக மாற்றினார்கள் தக்வா இறையச்சம் நற்குணம் பெளிப்படையான பேச்சு விட்டுக் கொடுக்கும் தன்மை ,இது வந்தால் நாமும் ஒன்றுபடலாம்,
ReplyDelete