Header Ads



இறுதிக் கிரியைகளில் பங்கேற்க, தம்மாலோக தேரருக்கு அனுமதி!


கொழும்பு எலன்மெதினியாரம விஹாரையின் மாநாயக்க தேரர் உடுவே தம்மாலோக தேரருக்கு அஸ்கிரிய பீடாதிபதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் யானையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், காலஞ்சென்ற அஸ்கிரிய பீடாதிபதி கலகம அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க அனுமதியளிக்குமாறு தம்மாலோக தேரர் சட்டத்தரணி ஊடாக இன்று நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் நிசாந்த பிரிஸ், இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இறுதிக் கிரியைகளில் தம்மாலோக தேரர் பங்கேற்க முடியும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 13ம் திகதி அஸ்கிரிய பீடாதிபதியின் இறுதிக் கிரியைகள் அஸ்கிரிய மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.