Header Ads



டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியானால், உம்மா உணர்வு தட்டி எழுப்பப்படுமா..?

-Mohamed Rajhi -

வரலாற்றில் நேர் மறையான சம்பவங்கள் சாதகமான சமுதாய மாற்றங்களை கொண்டுவந்துள்ளன ..

கர்வம் கொண்ட பிர் அவுனின் அட்டகாசங்கள், மூஸா ( அலை ) அவர்களை நபியாக அனுப்பப்பட
காரணமாக இருந்ததுடன் அடக்கப்பட்டிருந்த பனூ இஸ்ராயீல்களின் விடுதலைக்கும் , ஆணவம் கொண்ட  சாம்ராஜ்யம்  ஒன்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது .

அடக்குமுறைக்கும் அநீதிக்கும் உள்ளாக்கப்படும் சமூகத்துக்கு அல்லாஹு த ஆலாவின் உதவிகள் எப்போதும் இருந்து வந்துள்ளதை புனித அல் குர் ஆன் நமக்கு கற்றுத்தரும் போதனை . காலம் தாழ்த்தினாலும்  பொறுமையுடன் இறைவனை மட்டும் நம்பி உள்ள அவன் அடியார்களுக்கு இறுதியில் அவன் உதவி வந்து சேரும் என்பது வரலாறுகள் நெடுக நாம் கற்ற  படிப்பினைகள்.

மதவாதத்தையும் இனவாதத்தையும் வார்த்தைக்கு வார்த்தை வாந்தியாக கக்கும் குடியரசுவாத கட்சியின் முன்னணி  அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ,தேசியவாதம் என்ற பேரில் வெறுப்புணர்வுகளை விதைத்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று வருகிறார் .
இஸ்லாத்தை நேரடியாக தாக்கி முஸ்லீம் விரோத போக்கை கையாளும் அவர் , அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய
கோடிஸ்வரர்களில் ஓருவர் . அகதிகளுக்கு எதிரான போக்கை, விசேடமாக சிரிய நாட்டு முஸ்லீம் அகதிகளுக்கு  எதிரான போக்கை கொண்டவர் .
தனது பணத்தாலும் ,வெறுப்புக்  கருத்துக்களாலும் அமெரிக்க ஜனாதிபதி ஆகி விடலாம் என்று  உறுதி கொண்டுள்ளார் . ஆரம்பத்தில் முட்டாள் ஒருவரை போல காட்டப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் ,இப்போது மேற்கத்திய மீடியாக்களில் ஹீரோ போன்று காட்டப்பட்டு வருகிறார் .

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறினால்
இதனால் பல நன்மையான விடயங்கள் உம்மா பெற்றுக்கொள்ள முடியும் .

இதுவரை கடந்தகால அமெரிக்க ஜனாதிபதிகள்  வெளியே ஒன்றையும் உள்ளே இன்னொன்றையும்  கூறி
சமாதானம்  ,மனித உரிமை ,ஜனநாயகம்,  மேற்கத்திய பெறுமதிகள் ஏன் அணு , இரசாயன ஆயுதங்கள் என்ற பெயர்களில் முஸ்லீம்களையும் சர்வதேச  அரங்கையும் ஏமாற்றி வந்தனர் .

இதனால் சாத்தான்  வேதம் ஓதுவது போல பலஸ்தீன பிரச்சினையில் அமெரிக்காவை பல முஸ்லீம் நாடுகளும் ,சில பலஸ்தீன தலைவர்களும் நம்பத்தகுந்த நீதிபதியாக நம்பி வந்தனர் . இதனால் சமாதான பேச்சுவார்த்தைகள் என்ற பேரில் காலமும் நேரமும் வீணடிக்கப்பட்டது . பலஸ்தீன மக்களும்
உம்மாவும் இழந்ததெல்லாம் நேரத்தையும், காலத்தையும் உயிர்களையும் ,உடைமைகளையும் , நிலத்தையும்தான் ..

அமெரிக்காவில் பூதம் ஓன்று  ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை தமது ஆசனங்கள் பாதுகாக்கப்பட்டால் போதும் என்ற மத்திய கிழக்கில் உள்ள மன்னர்மார்களின் வேஷம் அந்நாட்டு
மக்கள் மத்தியில் எடுபடாமல் உள்ளதற்கு காரணம் தேசியவாதம் உள்ளங்களில் வேறூன்றி போய்விட்டமையே .  . உம்மாவுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை நமது சவூதிக்கு நமது கட்டாருக்கு நமது எமிறேட்சுக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற நிலைக்கு முஸ்லீம் சமுகம் தள்ளப்பட்டுள்ளது . பிரித்து வைக்கப்பட்டு, தேசிய வாத ஆடை போத்தப்பட்டு, ஒன்றின் பின் ஒன்றாக வேட்டையாடப்பட்டு வருகிறோம்  ..

ட்ரம்ப் போன்ற ஓர் இனவாதி ,மதவாதி ஆட்சிக்கு வரும்போது பல   மார்க்க  அறிஞர்களின் கருத்துக்கள் எவ்வாறாக இருக்கின்றன என்பதை அறிய முடியும் .மேற்கின்  திருப்திக்காக  நடுநிலை வாதம் பேசும் பலர் அடையாளம் காணப்படுவார்கள் . இன்ஷா அல்லாஹ் ..


ட்ரம்ப் ஜனாதிபதியாகும் போது அமெரிக்க  முஸ்லீம்களின்  தேசிய வாதத்துக்கான வெகுமதிகளின் அர்த்தங்கள் உணரப்படும் .அது மாத்திரம் அன்றி தேசியவாதம் கொண்ட ஒவ்வொரு முஸ்லீமும்  இதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்வார்கள் .இன்ஷா அல்லாஹ் ..

முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நாடுகளில் உள்ள பல   மன்னர்கள், தலைவர்கள் , இமாம்கள் , மற்றும் சமூக தலைவர்கள்,கல்வி மான்கள்  வெளிப்படையாக  முனாபிக்குகளாக அல்லாஹ்வினால  அடையாளம் காட்டப்படுவார்கள்  இன்ஷா அல்லாஹ் ..

உம்மா ,தொலைத்துவிட்டு  தேடித்திரியும் தனது அடையாளத்தை உணர்ந்து கொள்ளும் . மார்க்கத்தை ,அதன் கடமைகளை முறையாக பின்பற்றாத பல முஸ்லிம் பெயர்  தாங்கிகள்,  தம்மை உண்மையான முஸ்லீம்களாக மாற்றிக்கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ் ..

தொடர்ச்சியான எதிர்மறை பிரபலத்தால் இஸ்லாத்தில் என்ன உள்ளது என அறிய இஸ்லாத்தை கற்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் . இஸ்லாத்தை தழுவுவோர் தொகை உயர்வடையும் இன்ஷா அல்லாஹ் ..

வீட்டுக்கு   வீடாக வீதிக்கு  வீதியாக, ஊருக்கு ஊராக  பிரிந்து போய் கிடக்கும் நமக்கிடையே உள்ள பிணக்குகளை நாமே களைய முற்படுவோம்  .
இன்ஷா அல்லாஹ் ...

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

2 comments:

  1. இன்ஷா அல்லாஹ் அனைத்து பாBதில்களும் அழியும் ஹக்கு நிலையாகும்

    ReplyDelete

Powered by Blogger.