ஈரான் ஏவுகணை சோதனை - உலக நாடுகளுக்கு அதிர்ச்சி
பொருளாதார தடையில் இருந்து விலக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாடு தொடர்ந்து அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில்தான் இந்த தடை விலக்கிகொள்ளப்பட்டது. ் இந்நிலையில் இன்று ஈரான் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ பயிற்சியின் ஒருபகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஆயுதப்பிரிவுகளில் ஒன்றான புரட்சிகரப் பாதுகாப்புப்படையின் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈரான் செய்தி நிறுவனம் ஐ.எஸ்.என்.ஏ., வெளியிட்டுள்ள செய்தியில், பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பது ராணுவ பயிற்சியின் ஒரு அங்கம் ஆகும்.
தாக்குதல்களை தடுக்கக்கூடிய ஈரானின் ஆற்றலை காட்டுவதற்கும், எந்த ஒரு நாட்டிடம் இருந்து ஈரானுக்கு வருகிற அச்சுறுத்தலை எதிர்கொள்கிற ஆற்றலை ஈரான் பெற்றிருப்பதை காட்டவும்தான் ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக வட கொரியா ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதித்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளித்து வரும் நிலையில் தற்போது ஈரானும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment