பிரதமர் பதவியை என்னிடம் தரவேண்டும், இல்லாவிட்டால் மைத்திரிக்கு வேட்டு வைப்பேன் - மகிந்த சபதம்
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் கடந்த 17 ஆம் திகதி நடந்த கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு நெருக்கமான குழுவொன்றை எல்லே குணவங்ச தேரரை சந்திக்க அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குணவங்ச தேரரை சந்திக்க சென்றவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, தேரருடன் உரையாடியுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக உரையாடிய ஜனாதிபதி, இறுதியில் மகிந்த எனக்கு பிரதமர் பதவியை கொடுத்திருந்தால், இன்று வரை அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்பு கொண்ட எல்லே குணவங்ச தேரர், ஜனாதிபதி கூறியதை அனைத்தையும் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மகிந்த அளித்த பதிலை அனைவரும் கேட்க கூடியதாக தேரர் தனது தொலைபேசியின் ஒலிப்பெருக்கியை இயங்க செய்துள்ளார்.
எனது மகனை சிறையில் அடைத்து பொய் வழக்கு போட்டு, கொடுக்க வேண்டிய அத்தனை வதைகளை கொடுத்த பின்னர், மைத்திரியுடன் எனக்கு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை.
எனது இறுதியான கொடுக்கல் வாங்கல்தான் பிரதமர் பதவி, பிரதமர் பதவியை எனக்கு வழங்கினால், தனித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும். அதற்கு நான் உதவி வழங்குவேன்.
எனக்கு பிரதமர் பதவியை கொடுக்காது போனால், நான் மைத்திரியின் ஜனாதிபதி பதவிக்கும் வேட்டு வைப்பேன் என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் பிரதிநிதிகள், பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க எந்த வகையிலும் ஜனாதிபதி இணங்க மாட்டார்.
இதற்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் பதவி ஒன்றை சமல் ராஜபக்சவுக்கோ, கோத்தபாய ராஜபக்சவுக்கோ பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மீண்டும் பேசும் நோக்கில் ஜனாதிபதியின் பிரதிநிதிகள் திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Deal is going on..............
ReplyDeleteஹ்ம்ம்..... நல்லாட்சி! superb !
ReplyDeleteநான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
ReplyDelete